Sunday, November 29, 2020

இதையும் படிங்க

பெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா!

இந்த ஊரடங்கு காலத்தில் குடும்பத் தலைவிகளிடம் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவைகளை போக்கி ‘அவரவர் வீடுகளில் இருந்தபடியே அரை மணிநேரத்தில் உடலுக்கும், மனதுக்கும் தேவையான ஆற்றலை...

சர்க்கரையால் உடலுக்கு பாதிப்பா? | புதிய பிரசாரம்!

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவுக்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன....

8 பயிற்சியும்… 8 நாளில் ஏற்படும் மாற்றமும்…

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம்.எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.இந்த நோய்களை, கொல்லாமல்...

நோய் எதிர்ப்பு சக்தியில் முதலிடத்தில் முருங்கை

கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய அரக்கன் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இந்த நோய் வராமல் தடுப்பதற்காக...

ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்படும் பெண்களின் மூளை

ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து...

ஆசிரியர்

ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக இளைஞர்கள் பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்துகொண்டிருந்த ஒருவர், நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும்போது அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? என்று அறிந்து கொள்ளலாம்.

சிறிது காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஐந்து மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும்.

ஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 – 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலிலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும் என்பதால் அதைச் சமன் செய்யக்கூடிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனப்படும் உடல் வறட்சி ஏற்பட்டு மயக்கம், சோர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.

தினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 – 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் வொர்க்அவுட் செய்வோர் தங்களின் உறக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்று.

ஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 – 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவு வழியாகவோ, தானியங்கள் போன்ற சைவ உணவு வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் பயிற்சிபெறும் ஜிம் மாஸ்டரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய்போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்குத் தகுந்தாற்போல உடல் எடையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியாளரின் வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் தோள்பட்டை, எலும்பு, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

இதையும் படிங்க

குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?

அம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.“குழந்தைகளின்...

வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.அது தற்சமயம்...

அதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை...

வாழைப்பழத்தின் நன்மை

மனித இனத்தை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வாயு மண்டலம் சூடாவது, ஓசோன் படலம் தேய்ந்த அதன் வழியே புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைவது, பனிப்பொழிவில்,...

அதிக கோவப்படுபவரா நீங்கள்

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக தந்தையின் கோபத்திற்கு பயந்து...

உடலுக்குள் உணவு நகர்வது எப்படி?

உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும்...

தொடர்புச் செய்திகள்

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

இன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும்போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை...

இலவச நடமாடும் மருத்துவ சேவைகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடத்தப்படும் இலவச மருத்துவ சேவைகள் அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காகவும் அடுக்குமாடி...

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 39ஆயிரத்து 68பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பதிவுகள்

பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்

பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோமிளகு தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் - சிறிதளவுஉப்பு - தேவைக்குசெய்முறை:  சர்க்கரை வள்ளிக்கிழங்கை...

உண்மைக்குப் புறம்பான செய்தி- பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

பிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக...

தமிழகத்தின் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

இன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...

துயர் பகிர்வு