Friday, January 21, 2022

இதையும் படிங்க

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்…

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால்...

மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்!

கொரோனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் என்ற மாறுபாடுடன் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நுரையீரலை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். சுவாசத்தை பராமரிப்பதில் நுரையீரல் முக்கிய...

மன அழுத்தத்தை நீக்கும் தியான முத்திரை!

மனதில் கவலை, துக்கம், மன அழுத்தம் இருந்தால் நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும். எனவே தியான முத்திரை செய்தால் மன அழுத்தம் நீங்கும். கவலை நீங்கும். அதனால் நுரையீரல் சக்தி பெற்று...

சிறுவயது உடல் பருமனை குறைக்கலாம்

குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம்

பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத்...

யுனானி வைத்திய முறை!

இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. முகலாயர் ஆட்சி காலத்தில்தான் யுனானி சாதாரண மக்களிடையே பிரபலம் ஆனது....

ஆசிரியர்

கொரோனா ஊரடங்கு… 2021-ம் ஆண்டில் பிரபலமான உடற்பயிற்சிகள்!

இரண்டு வருடங்களாக உலகை ஸ்தம்பிக்க வைத் திருக்கும் கொரோனா, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் அதிக உயிரிழப்பை சந்திக்க நேர்ந்தது.

2021-ம் ஆண்டில் இளம் வயதினர் பலர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் நலன் மீது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணரவைத்தது.

ஆரோக்கியமான உடலையும், மனதையும் பேணுவதற்கு பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் 2021-ம் ஆண்டில் இருந்து விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அவை வழக்கமாக நடைமுறையில் இருந்து வரும் உடற்பயிற்சிகள்தான். அனைத்து தரப்பினரும் எளிமையாக மேற்கொள்ளக் கூடியவைதான் என்றாலும் இதுநாள் வரை அதனை அலட்சியமாக கருதியவர்கள் கூட ஆர்வமாக உடற்பயிற்சி மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

2020-ம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள், ஜிம்கள் உள்ளிட்ட உடற்பயிற்சி மையங்களில் நீடித்த கட்டுப்பாடுகள் காரணமாக பலரும் வெளிப்புற பயிற்சிகளை மேற்கொண்டார்கள். 2021-ம் ஆண்டில் அதிகம் பேரால் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சிகளின் தொகுப்பு இது.

ஓட்டம்:

அன்றாட நாளை சுறுசுறுப்பாக தொடங்குவதற்கு சிறந்த வழி, ஓட்டப்பயிற்சியை மேற்கொள்வதுதான். இது வெளிப்புற பயிற்சிகளில் முதன்மையாக கருதப்படுகிறது. ஓடுவது சுவாசம் மற்றும் இதய துடிப்பை சீராக பராமரிக்க உதவும். உடல் ஆற்றலை (ஸ்டெமினா) அதிகரிக்கச் செய்யும். ஓடுவதும், ஏரோபிக் உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக கருதப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

நடைப்பயிற்சி:

ஓடுவதை விட விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த பயிற்சியின்போது கால்களின் பின் பகுதி தசைகளுக்கு போதுமான அழுத்தம் கொடுக்கப்படும். அதன் மூலம் கால் தசைகள் வலுப்பெறும். மேலும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி இதய துடிப்பு மற்றும் சுவாசத்தில் சமநிலையை ஏற்படுத்தும். அதனால் இது ஒட்டுமொத்த உடல் அமைப்புக்கும் சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது.

சுவாசப் பயிற்சிகள்:

கொரோனா தொற்று நுரையீரலை கடுமையாக பாதிக்கக்கூடியது. முதல் அலையை விட இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. பல உயிரிழப்புகளுக்கு காரணமானது. உடலில் ஆக்சிஜன் அளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி நிறைய பேர் மரணத்தை தழுவினார்கள். ஆழ்ந்த சுவாசம், ப்ரோனிங், பிரணாயாமம் போன்ற சுவாச பயிற்சிகள் ஆக்சிஜன் அளவை சீராக பராமரிக்க உதவின. அதனால் பலரும் சுவாச பயிற்சிகளில் கவனம் செலுத்தினார்கள்.

வயிற்று சுவாசம்:

‘பெல்லி ப்ரீத்திங்’ என்று அழைக்கப்படும் இந்த மூச்சுப் பயிற்சி உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை அதிகரிக்க உதவும். இந்த பயிற்சியை மேற்கொள்வது எளிதானது. முதலில் கால்களை மடக்கிய நிலையில் ரிலாக்‌ஸாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்பு கைகளை வயிற்று பகுதியில் வைத்து அழுத்திய நிலையில் அடி வயிற்றி லிருந்து மூச்சை உள்ளிழுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சுக்காற்று பரவும் வகையில் 10 வரை எண்ணுங்கள். பின்பு மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். வாய் வழியாகவும் மூச்சை வெளியிடலாம். இந்த பயிற்சியை நான்கைந்து முறை செய்யுங்கள். நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் பயிற்சி இது. உதரவிதான தசையையும் பலப்படுத்தும். ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும்போதும், முந்தைய நேரத்தை விட நன்றாக மூச்சை உள்ளிழுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நடைப்பயணம்:
இயற்கை வளங்கள், பசுமை சூழ்ந்திருக்கும் பாதைகள் அல்லது நீண்ட, வளைந்த சாலைகளில் நடைப்பயணம் மேற்கொள்வது ‘ஹைகிங்’ என்று அழைக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பலரும் நடைப்பயணம் மேற்கொள்ள தொடங்கியதால் 2021-ம் ஆண்டில் இந்த உடல் செயல்பாடு பிரபலமடைந்தது. இந்த நடைப்பயணம் மூலம் இயற்கையுடனும், வெளிப்புறச் சூழலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்கலாம். இது உடலையும், மனதையும் ரிலாக்ஸாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். மலைப்பகுதிகளில் ‘ஹைகிங்’ மேற்கொள்வது சிறப்பானது.

இதையும் படிங்க

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

சிறுநீரகம் சிறப்பாக இயங்கும் முத்திரைகள்!

மூத்ராக்ஷய முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல்,...

இரவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்….

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

10 நிமிட உடற் பயிற்சி தரும் பலன்கள்….!

உடற்பயிற்சி மீது போதிய ஆர்வம் செலுத்தாதவர்கள் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு உடற்பயிற்சிக்கு சிறிது நேரத்தையாவது ஒதுக்குவதற்கு முனைப்பு காட்டுகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை...

கல்லீரலை நன்கு இயங்க வைக்கும் முத்திரை

பிராண முத்திரையை தினமும் காலை மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்தால் மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று...

காலையில் எழுந்ததும் கட்டாயம் செய்ய வேண்டியவை…!

காலையில் கண் விழிக்கும்போது உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கை, கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறியுங்கள். இது சுறுசுறுப்புக்கு வித்திடும். அதிகாலையில் குறைந்தபட்சம் அரை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

மேலும் பதிவுகள்

காலிபிளவர் முட்டை பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்காலிபிளவர் - 1 பூ சிறியதுமுட்டை - 2மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம்...

மைத்திரி தலமையிலான சு.க. அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது !

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்தார். 5,000 மேலதிக கொடுப்பனவை வழங்க...

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று!

இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். ஆரம்ப நிகழ்வாக...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதம்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்....

பிந்திய செய்திகள்

குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த 7 வழிகள்

புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

துயர் பகிர்வு