Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடா காட்டுத் தீயில் ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

கனடா காட்டுத் தீயில் ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

1 minutes read

கனடா ஆல்பர்ட்டா பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது.

அத்துடன், காட்டுத் தீயில் 1,458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

கனடா

காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளதுடன், ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தாக அவசரகால மேலாண்மை அமைச்சு தெரிவித்தது.

இந்த நிலையில், காட்டுத்தீ மற்றும் வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More