Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடா பிரதமர் பயணித்த விமானம் மீண்டும் கோளாறு

கனடா பிரதமர் பயணித்த விமானம் மீண்டும் கோளாறு

0 minutes read

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார்.

பயணம் முடிந்து ஜனவரி 4ஆம் திகதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜனவரி 3ஆம் திகதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா சென்றது. பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானமும் கனடா திரும்பின.

கடந்த மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது. ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More