Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தினேஸ் சாப்டரின் அதிகம் அறியப்படாத கிரிக்கெட் பின்னணி

தினேஸ் சாப்டரின் அதிகம் அறியப்படாத கிரிக்கெட் பின்னணி

1 minutes read

கண்டியின் தலைசிறந்த சட்டத்தரணி சேமா தனது பிள்ளைகளிற்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார்,பாடசாலை டிரினிட்டி, கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசின்ஹ ரக்பிக்கு குயென்டின் இஸ்ரேல் . இதன் காரணமாக குமார்சங்ககார மிகச்சிறந்த டெஸ்ட் வீரரானது ஆச்சரியமளிக்கவில்லை

அவரை போல சந்திர ஸ்காப்டரும் தனது பிள்ளைக்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார் கல்விக்கு மெட்ராசின் செர்வூட் ஹோல் கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசிங்க.

இலங்கையில் இன்னமும் உயிர்வாழும் மூத்த கிரிக்கெட் வீரர் சந்திரா.இரண்டு வாரங்களிற்கு முன்னர் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட அவரது மகன்தினேஸ் பிரிட்டனில் பின்ஞ்லி கிரிக்கெட் கழகத்திற்காக Finchly Cricket Club in the Middlesex Leagueகிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அவர் இலங்கைக்கு திரும்பி வந்த வேளை தமிழ்யூனியன் கழகத்தில் முத்தையா முரளீதரன் ரங்கனஹேரத் நிரோசன் பண்டாரதிலக உபுல் சந்தன போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக அவர் மூர்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக Moors Sports Club,கிரிக்கெட் விளையாடினார்.

தினேஸ் சிறந்த பந்துவீச்சாளர்- அவர் ஒருமுறை எஸ்எஸ்சிக்கு எதிராக ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். மார்வன் அத்தபத்துவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தினேஸ் சாப்டரின் துடுப்பாட்டம் குறித்து எதனையும் சிறப்பாக குறிப்பிட முடியாது என்ற போதிலும் அவர் ஒரு முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்- 11 வது வீரராகவும் களமிறங்கியுள்ளார்.

அவர் பதினொராவது வீரராகவும் களமிறங்கியுள்ளார்.

தினேசை கௌசல் சில்வாவுடன் ஒப்பிடலாம்,அவர் இலகுவில் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்க மாட்டார் இறுதிவரை களத்தில் நிற்பார்.

ஒருமுறை என்சிசிக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்

கல்வியிலும் தினேஸ்சாப்டர் மிகச்சிறந்தவராக விளங்கினார்.அவர் தனது 18 வயதில் கற்கைநெறியை பூர்த்தி செய்தார்- இலங்கையில் மிக இளவயதில் அந்த கற்கையை பூர்த்திசெய்தவர்களில் இவரும் ஒருவர்.

மரணம் நிகழ்ந்தவேளை அவர் கழகத்தின்Moors Sports Club, குழு உறுப்பினராக காணப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More