கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திருவிழா 2023 நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு செயலகம், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு சங்கங்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் விளையாட்டுப்பிரிவிற்கான இணைப்பாளர் கலாதரன் நேரடியாக போட்டிகளை ஒருங்கிணைத்துக்கொண்டு இருக்கின்றார். கிளி மக்கள் அமைப்பின் நிகழ்ச்சி இணைப்பாளர் சிறீமுருகன் அவர்களின் மேற்பார்வையில் அணைத்து நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது இறுதி நிகழ்வுகளை சிறப்பாக நடாத்துவது தொடர்பாகவும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிக்குமான இணைப்பாளகளுடனும் கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

