Saturday, February 27, 2021

இதையும் படிங்க

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்துள்ளது!

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து...

மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும்!

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர்...

ஆசிரியர்

கூட்டமைப்பிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததென்ன?

  • 13 ஐ முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்
  •  மாகாண சபை முறைமை நீக்கப்படக் கூடாது
  •  வட,கிழக்கு அபிவிருத்திக்கான பங்களிப்பு தொடரும்
  •  போரால் பதிக்கப்பட்டோர் குறித்து அதிக சிரத்தை
  •  பலாலி,காங்கேசன் துறை தொடர்பில் விசேட கரிசனை

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நீண்டகாலமாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாகவும் ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லையென இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடமும் எடுத்துக்கூறி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டினை சந்திப்புக்களை மேற்கொண்ட சகல தரப்புக்களிடத்திலும் வெளிப்படுத்தியுள்ளதோடு, மாகாண சபைகள் முறைமை தொடரப்பட வேண்டும் என்றும், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டமைப்பினரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் காலை 9.30 இற்கு ஆரம்பமாகியிருந்தது.

சுமார் ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற இந்தச் சந்தப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனரிராஜா, புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் சந்திப்பினை நடத்தியன் பின்னர் கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஐக்கிய இலங்கையில் சமத்துவம், நீதி, சமாதானம், மரியானை ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறும் கேட்டிருந்தார்.

அவருடைய இந்த அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் சார்பாக நான் பாராளுமன்றத்தில் சொற்ப நேரத்திலேயே வரவேற்றும், நன்றிகளைத் தெரிவித்தும் இருந்தேன். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், அவருடைய(ஜெய்சங்கர்) கருத்துக்களை தமிழ் மக்கள் மற்றும் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்றதோடு நன்றிகளையும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர் (ஜெய்சங்கர்), இந்தியா தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஐக்கிய இலங்கைக்குள் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர்கள் சமத்துவம், கௌரவம்,  அமைதி,  சமாதனத்துடன் தமது பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதில் அதீத கரிசனை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், நீண்டகாலமாக இந்தியாவின் நிலைப்பாடாகவுள்ள இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, மாகாண சபைகள் முறைமை தொடர்பில் சமகாலத்தில் உள்நாட்டில் உள்ள நிலைமைகளை நாம் (கூட்டமைப்பு) சுட்டிக்காட்டியிருந்தோம். அதன்போது, அவர்(ஜெய்சங்கர்) மாகாண சபைகள் முறைமை நீக்கப்படக்கூடாது என்பதோடு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி இந்த விடயங்களை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட தன்னைச் சந்தித்த இலங்கையின் அனைத்து அரச தரப்பு பிரதிநிதிகளிடத்தலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக் கூறியதாக கூறினார். 

இதன்போது, இந்தியாவின் ஆழ்ந்த கரிசனை தொடர்ச்சியாக இருக்கின்றமைக்கு நாம் நன்றிகளை மீண்டும் கூறியதோடு இந்த விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்காக இந்தியாவின் வகிபாகம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். வட, கிழக்கு அபிவிருத்தயும் பாதிக்கப்பட்ட மக்கள் விவகாரமும் அதனையடுத்து, வடக்கு கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா தயாராகவுள்ளதாகவும் இந்திய முதலீட்டாளர்கள் வட,கிழக்கு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை விஸ்தரித்தல் உள்ளிட்ட விடயங்களில் தமது தொடர்தேச்சியான பங்களிப்பு இருக்கும் என்றும் அவர்(ஜெய்சங்கர்) உறுதிபடத் தெரிவித்தார்.

இதேவேளை, வட,கிழக்கில் உள்ள போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் அதிக சிரத்தையினை இந்தியா கொண்டிருப்பதோடு அவர்களுக்கான உதவித்திட்டங்கள் உள்ளிட்ட மேம்பட்ட பல விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதுபற்றிய விடயங்களில் கூட்டமைப்பின் பரிந்துரைகளையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பலாலி,காங்கேசன்துறை விவகாரம், இறுதியாக பலாலி, காங்கேசன்துறை தொடர்பில் நாம் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம். விசேடமாக பலாலியில் உள்ள யாழ்.சர்வதேவ விமானநிலையில் இயங்காத நிலையில் இருப்பதும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் அதனுடன் சார்ந்த அப்பிரதேச முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்பில் எமது கோரிக்கைகளை அவருக்கு விரிவாக தெரிவித்தோம்.

அதன்போது, தாம் இந்த இரண்டு விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதாகவும், யாழ்;ப்பாணத்திற்கும், இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்தை விரைவில் மீள செயற்படுத்துவற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

நன்றி- வீரகேசரி

இதையும் படிங்க

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!

கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...

இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. 

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

தொடர்புச் செய்திகள்

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

மேலும் பதிவுகள்

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...

குருந்தூரில் மீட்கப்பட்டது நாகர் வழிபட்ட இலிங்கம் | யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன்

குருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை...

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 2-வது குழந்தை பிறந்தது

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இன்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர்...

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்!

உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன் (lockdwon) ஆனால் நான் பத்து வருடம் (lockdwon)  இல் தான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ள...

பிந்திய செய்திகள்

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...

துயர் பகிர்வு