Sunday, June 26, 2022

இதையும் படிங்க

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்...

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது...

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு

நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர்...

எரிபொருள் நெருக்கடிக்கு சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்த நடவடிக்கை | அமைச்சர்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு...

ஆசிரியர்

சக்தி வாய்ந்த சர்வதேச சிறுபான்மை இனம் தான் தமிழர்கள் | தமிழ்மகன்


“யானைக்குத்தன்பலம் தெரியாது” என்பது தமிழ்ப்பழமொழி. உனது அல்லது உனது இனத்தின் பலம் எத்தகையது என்பதை சிலநேரங்களில் உன்னை விட உனது எதிரியே அதிகம் அறிந்திருப்பான். அரசியல் – பொருளாதார நோக்குநிலையில் தமிழர்களுக்கு இது பொருத்திப் போகின்றது.
உலகத்தமிழர்களின் கூட்டுப்பலத்தைப்பற்றி சிங்கள தேசத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1984 ம் ஆண்டு கூறிச் சென்ற வாக்கியம் தான் இந்தக் கட்டுரையின் தலையங்கமாக உள்ளது.

யூத நலன்களை மையப்படுத்தி அழுத்தக்குழுக்களை உருவாக்கினார்கள்.  உலகத்தமிழர்களின் கூட்டுப் பலத்தை தமிழர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். கல்விப்பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் அறிவுசார் சக்தி எதிர்காலத்தில் எப்படி ஒருபெரும் அரசியல் – பொருண்மிய சக்தியாக பரிணமிக்க வாய்ப்புள்ளது என்று அனுமானத்தை வைத்தே இந்தக் கருத்தை அவர் கூறியிருக்கவேண்டும். அவர் இதை 1984 ல் கூறும்போது புலம்பெயர் தமிழ்ச்சமூகம் இன்று இருப்பதுபோல் பெரிதாக அன்று உருவாகியிருக்கவில்லை. அவ்வாறாயின் எதை மனதில் வைத்து இந்தக் கருத்தைச் சொன்னார்.

யூதர்கள் என்ற அடையாளத்தை வைத்து ஒன்று திரண்டார்கள். உலகெங்கும் யூதர்களும் சிதறி வாழ்ந்தார்கள். சிதறி வாழ்ந்தாலும் தாங்கள் வாழும்நாடுகளில் கல்வியில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இப்போது குறிப்பாக.உலகெங்கும்வாழும் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் அந்தந்த நாடுகளின் மொழியை. கசடறக் கற்று கணணி.மருத்துவம். சட்டம்.வங்கி நிர்வாகங்கள்.அரசியல்.என்று பல்வேறு துறைகளிலும் கால்பதித்திருப்பதுடன்.செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.

 இவ் விதம் தனது அறிவுத்திறன் மற்றும் பொருண்மிய பலத்தை திசைமாற்றி தமக்கான அரசியல் ஆதாயங்களை உருவாக்கினார்கள்.  இதன் மூலம் உலகெங்கும் சிதறி வாழ்ந்தாலும் சக்திமிக்க சர்வதேச சிறுபான்மை இனமாக பரிணமித்திருந்தார்கள் என்ற உண்மையை தமிழ் மக்களுக்கும் பொருத்திப் பார்த்து அந்தக்கருத்திற்கு வந்திருக்கலாம். இந்தக் கணிப்பில் உண்மை உண்டு.

அதே சமயம் கால ஓட்டத்தில் உலகத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தும் ஆளுமைகொண்ட அரசியல் பொருளாதார கூட்டமைப்பாக விரிவாக்கம் பெறும் என்ற நம்பிக்கை தமிழ் உணர்வாளர்களிடம் உண்டு. இந்த நிலையில்.ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறிக் கிடக்கும் இந்த மூலதனங்களை( மனிதவளம்) ஒருங்கு சேர்த்து ஒருகட்டமைப்பாக உருவாக்க எடுத்த முயற்சி சாலப்பொருத்தமானதாகும். தமிழ் மொழியின் வரலாற்றுத் தாயகமான தமிழ் நாட்டிலும். தமிழ் ஈழத்திலும் தாய்மொழிக்கான அச்சுறுத்தல் என்பது குறைவு.ஆனால் மலேஷியா. சிங்கப்பூர் உட்பட உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களின் தாய்மொழிப் பயன்பாடு என்பது அச்சத்தை கொடுக்கும் வகையிலேயே உள்ளது.

இந்த விடயத்தில் தான் நாங்கள் ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்த கூட்டுப் பொருண்மியக்கட்டமைப்பில் இணைந்து கொள்ளும் தொழில் முனைவோர்கள் – மற்றும் வர்த்தகர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாறி தமது வியாபார நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளை தமிழ்மக்கள் பலரின் குடும்பபொருளாதாரமும் மேம்படும் சூழல் உருவாகும். இந்தப் பொருண்மியக்கட்டமைப்பின் அடையாளம் என்பது தமிழ்.  முன்னர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருந்த கிழக்கிந்திய கம்பனியில் தொடங்கி இன்றுள்ள உலகவங்கி. IMF . ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை பொருண்மிய நிதிக்கட்டமைப்புகளாகவே இருந்தன.

அதேவேளை. இந்த நாடுகளில் தமிழ் மொழிக்கல்விக்கான திட்டங்களை உருவாக்கி இயங்கச்செய்வதையும் இக் கட்டமைப்பு தனது கடமைகளில் ஒன்றாக வரித்துக் கொள்ள முடியும். உலகத்தமிழர்களின் இந்தக் கூட்டு பொருண்மியக்கட்டமைப்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தமிழ்மொழிதான். இந்த அடையாளம் பாதுகாக்கப்படவேண்டும். என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த நாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களில் இங்கே பிறந்து வளரும் பிள்ளைகளுடைய தாய்மொழிப் பயன்பாடு நலிவடைந்து வருகின்றது.

அதற்காக இந்தப் பொருண்மியக்கட்டமைப்பின் கலந்துரையாடல்கள் தமிழ் மொழியில் அமையும்படி பார்த்துக்கொள்வது பயன் தரும் விடயமாக இருக்கும். இன்னும் சில சந்ததிகள் கடக்கும் போது தமிழ் மொழிப் பயன்பாடு அழிவடைந்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகின்றது. ஆனால் அவை தமக்கான அரசியல் தேவைகளை அடைந்து கொள்ளும் ஆளுமைகளை இந்த கட்டமைப்புகள் மூலம் வைத்திருந்தன. வைத்திருக்கின்றன. இந்த தமிழ் பொருண்மிய கட்டமைப்பு கட்சி அரசியல்களுக்கும் மதநம்பிக்கைகழுக்கும் அப்பால் அதேசமயம் எல்லோரையும் அரவணைத்து நடுநிலைமை யுடன் ” தமிழர்கள்” என்ற அடித்தளத்துடன் இயங்குகின்றது மிகசிறப்பாகும்.

உலகெங்கும் சிதறி வாழ்ந்த( இன்று தமிழர்களைக் போல்)யூதமக்களுக்கென 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்கள் உருவாக்கியிருந்த யூத வங்கி பின்னர் இஸ்ரேல் என்றொரு யூததேசத்தை நிறுவ எப்படி முக்கிய பங்களிப்பு செய்ததோ. அதேபோல இந்த தமிழ் பொருண்மிய கட்டமைப்பும் உலகத்தமிழரின் அரசியல் நலன்களை பேண உதவும் ஒரு அரசியல் பொருண்மிய கட்டமைப்பாக வளர்ந்து வரலாற்றில் நிலைக்க உழைக்க வேண்டும்.

பொருண்மிய தளத்திலும் அறிவு தளத்திலும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்கின்றார்கள்.இவர்களின் பொருண்மியபலமும்.தொழில்முறைகள் சார்ந்த நிபுணத்துவ அறிவும் இந்த கூட்டுபொருண்மியகட்டமைப்பில் இணைந்து கொள்வதால் உலகத்தமிழர்களின் வாழ்க்கை வளமானதாகமாறும்.தமிழ் மொழியும் நீண்ட ஆயுளுடன் சிம்மாசனத்தில் நிலைத்திருக்க இந்த மாநாடு வழியமைக்கும்.

தமிழ் மகன்

இதையும் படிங்க

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற...

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்று (25) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நேற்று(24)...

சீன நகரில் டெஸ்லா காருக்கு தடை

சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் முன்னேறி செல்லும் ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

3 தசாப்தங்களின் பின் சாதித்த இலங்கை, ஆஸி.யுடனான தொடரை வெற்றிவாகையுடன் முடிக்க முயற்சி

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய இலங்கை, ஆர்.பிரேமதாச...

நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு

நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர்...

மேலும் பதிவுகள்

எரிபொருளுக்காக காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்....

துவிச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்த அமெரிக்க ஜனாதிபதி பைடனால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள  தனது இல்லத்திற்கு அருகிலுள்ள  கேப் ஹென்லோபென்  பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி நேற்று  சனிக்கிழமை...

எரிபொருள் நெருக்கடிக்கு சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்த நடவடிக்கை | அமைச்சர்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிகரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் மத்தியப்...

அப்பா எனும் சாமி | த. செல்வா

முற்றத்தைக் கூட்டுகையில்"கூட்டாதே தாடா" என்கிறார்தேங்காய் உரிக்கையில்"இஞ்ச கொண்டாடா" என்கிறார்எந்தன் வியர்வைத் துளிகளைக் கூடஉதிரச் சிதறலாய் எண்ணிச் சொன்னாரோ என்ன!

நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு

நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர்...

பிந்திய செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

துயர் பகிர்வு