Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா | பா.உதயன்

நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா | பா.உதயன்

2 minutes read
ரஷ்யா, உக்ரைன் போர் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. மனிதப் பேரழிவுகளோடும் பொருளாதாரப் பின்னடைவுகளுடனும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலகத்தை ஆக்கிரமித்து தாக்கிய கொரோன வைரசு ஒரு பக்கம் அதைத் தொடர்ந்த ரஸ்சிய உக்ரேன் யுத்தம் இப்படியே தொடரும் நோய் யுத்தம் போன்ற அழிவுகளினால் இன்று உலகில் சமூக அரசியல் பொருளாதாரம் ( social political and economical structure ) ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
உலக மக்கள் பெரும் பொருளாதா பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இன்னும் குறிப்பாக ஏழை நாடுகளை இது பெரிதும் பாதித்துள்ளது. உலகின் பெரும் பான்மை மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போதும் பெருவாரியான பணமும் ஆயுதமும் போருக்காக வீண் விரயம் செய்யப்படுகின்றது. உலகம் பெரும் போர் ஒன்ரை நோக்கி நகர்கிறதா இன்று நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா. Are we living in a turbulent world.
தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல்( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்.
அண்ணன் அமெரிக்காவும் அவர் தம் தம்பிமார் ஐரோப்பாவும் அணுகுண்டையும் ஆயுதங்களையும் செய்து கொண்டும் விற்றுக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கும் அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் சமாதானத்தை எப்படி ஏற்படுத்த முடியும். இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ( sovereignty and integrity ) என்று சொல்லிக் கொண்டே இன்னும் ஒரு நாட்டை ஆக்கிரமிப்பவர்களினாலும் தங்கள் அரசியல் பொருளாதார நலன்களையே எப்பொழுதும் சிந்திப்பவராலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு இன்னும் எண்ணை ஊற்றி எரிப்பவர்களினாலும் எங்குமே எல்லைகளை அறுத்து தின்னும் பெருச்சாளிகளினாலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எப்பொழுதுமே அதிகாரசக்தி மிக்க நாடுகளோடு சேர்ந்து பாடும் ஐ. நாவால் எப்படி ஒரு சமாதானத்தை எங்கும் ஏற்படுத்த முடியும்.
எந்தப் பிரச்சினையும் இருந்து கதைத்து இராஜதந்திரரீதியிலான அணுகுமுறையே சமாதானத்துக்கான பாதையை ஏற்படுத்த முடியும். ரஸ்சிய ஆளும் தலைமையிலும் அவர்களின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அருகில் இருக்கும் நாடுகளோடு சமாதானத்தை ஏற்படுத்தும் வழியை தேட வேண்டுமே தவிர யுத்தங்களினால் பெரும் அழிவே என்பதை அறிய வேண்டும் இதுவே இன்றும் எரிந்து கொண்டிருக்கும் ரஷ்யா உக்ரேன் போருக்கும் ஒரு சமாதானத்தை தேட வழி பிறக்கும்.
ஈராக்கை அழித்த போதும் ஆக்கிரமித்த போதும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் ஜப்பானில் அணுகுண்டை போடும் போதும் கியூபாவை அழிக்க எடுத்த முயற்சியின் போதும் ஜனநாயக மறுப்பு நாடான சவுதி அராபியாவோடு நட்பு கொண்டாடும் போதும் ஜனநாயகம் பேணாத நாடு சீனா என்று கூறிக்கொண்டும் அதனோடு வியாபாரம் செய்யும் போதும் சிறு பான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அடக்கியபோதும் எங்கே போனது உங்கள் இறைமையும் ஒருமைப்பாடும் ஜனநாயகமும் இன்று மட்டும் எப்படி வந்தது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இறைமையும் ஜனநாயகமும் பாதுக்காக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று. எல்லாமே உங்கள் உங்கள் தேசிய நலனுக்கு ஏற்றா போல் ஆடும் நாடகம் மட்டுமே.
தத்துவவியலாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்தி கூறுவது போல் இந்த உலகம் யுத்தங்களினாலும் வன்முறையாலும் ஆயத உற்பத்தி விற்பனையாலும் அவர் அவர் தேசிய நலன்களோடு கூடிய தத்துவார்த்த சிந்தனைகளோடு அமைதி சமாதானம் இன்றி இருக்கிறது. மனிதர்கள் இன்னும் ஏன் இந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார்கள் என்ற பெரும் சவால் மிக்க கேள்வியை உலகத்திடம் கேட்கிறார். இனி வரும் உலகம் புதிய உலக ஒழுங்கோடு புதியதொரு முன்னுதாரண மாற்றங்களோடு (new paradigm shift) கூடிய பாதையில் இனி பயணிக்குமா. இவை எல்லாவற்றையும் கடந்து உலகின் அனைத்து இனங்களும் சமத்துவமான( Equality) ஒரு பாதையில் பயணிப்பதென்பது இனி வரும் உலக ஒழுங்கில் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.
பா.உதயன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More