நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாளை (27) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்துப் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இன்று ஒரு நாள் மட்டும் பாடசாலைகளை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி எந்தவித மாற்றமுமின்றி நடைபெறும்.
எனவே, அழகியல் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்திற்குச் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலைமைகள் சீரானதும் பாடசாலைச் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும்.