June 7, 2023 5:44 am

உக்ரைன் போரை நிறுத்த சீனாவின் 12 திட்டம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரஷ்ய சீன அதிபர்கள் சந்திப்பின் திருப்புமுனை

———————————————

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

உக்ரைன் போருக்குப் பின்னர், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய பயணம் மேற்கொண்டார். அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த அவர் முறைப்படியான ஆலோசனைகளை மேற்கொண்டார். உக்ரைன் மீதான போரால் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தி வருகின்றன.

ரஷ்ய–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, சீன அதிபர் 12 அம்ச திட்டங்களை வழங்கி உள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங், அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா சென்றார் அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உக்ரைனுக்கு இறையாண்மையை மீட்டெடுப்பதில் சீனா உண்மையான பங்கு வகிப்பது வரவேற்கத்தக்கது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை பல நாடுகள் புறக்கணிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பிறகு உலகின் 2வது வல்லரசு நாடாகவும், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியுமான சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி பேச்சுவார்த்தை

இருவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் நிலையில், வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்தித்துக்கொண்டது உலக அரங்கில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த சந்திப்பில் சீனா, ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய பொருளாதார ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜின்பிங்கின் ரஷ்ய பயணம் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

4 மணி நேர பேச்சு

4 மணி நேரத்துக்கும் மேலாக இரண்டு அதிபர்களும் பேசிக்கொண்டனர். அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, “ரஷ்யா, சீனா உறவை வலுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சீனாவின் வேகமான வளர்ச்சி என்னை பொறாமைக் கொள்ளச் செய்கிறது. உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 12 அம்ச திட்டங்களை தெரிவித்திருக்கிறார்.

அவரின் ஆலோசனைகளை மரியாதையுடன் பார்க்கிறோம். மேலும், உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சீன அதிபர் ரஷ்யா செல்வது தொடர்பாக அறிவிப்பு வந்த உடனேயே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன்,”ரஷ்யாவின் எந்தவொரு தந்திரோபாய நடவடிக்கையாலும் உலகம் ஏமாறக்கூடாது. உக்ரைன் போரை அதன் சொந்த நிபந்தனைகளில் முடக்க வேண்டும் என, சீனா உள்ளிட்ட போரை ஆதரிக்கும் நாடுகள் விரும்புகின்றன.

உக்ரைனில் இருக்கும் ரஷ்யப் படைகளை திரும்பப் பெறாமல், போர் நிறுத்தத்துக்கான அழைப்பு விடுப்பது ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்துவதை ஆதரிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தது.

விளாடிமிர் புடினை சந்தித்த சீன அதிபர்

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் போர் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு
அதிபர்கள் சந்திப்பு
ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் இதற்கு மந்தமான வரவேற்பை அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிற்கு உக்ரைனுடனான போரில் ஆயுதம் வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் சீனாவை ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, சீன அதிபர் ஜியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். அமைதியை விரும்பும் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், உக்ரைனில் நடக்கும் போரில் சீனா “ஒரு புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டைநிலைநிறுத்தும்“ என்றும் “அமைதிக்கான பேச்சுக்களை ஊக்குவிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும்” எனவும் கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்