இதற்கு முந்தைய பதிவில் அகத்திணையில் அமைந்த காதல் ஒழுக்கத்தை மறைக்காது புலப்படுத்திய பெண் புலவர்களைப் பார்த்தோம். இந்தப் பதிவில் மறக்குடியில் பிறந்த வேறு சில பெண் புலவர்கள் தாங்கள் கண்டதையும் தமக்கு ஏற்பட்டதையும் தத்தம் பாடல்களில் வீரத்துடன் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.
அன்றைய காலத்தில் மறக்குடி மகளிர் நெஞ்சுரத்துடன் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதை தமது பாடல்கள் மூலம் எவ்வாறெல்லாம் இந்தப் புலவர்கள் எமக்குக் காட்சியாகக் காட்டி நிற்கின்றனர் என்பதை இந்தப் பதிவில் உற்று நோக்கலாம்.
புறநானூறு 86
காவற்பெண்டு எனும் ஒரு பெண் புலவர் ஒரே ஒரு பாடலையே சங்க இலக்கியத்தில் பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் “ஏறாண் முல்லை” என்ற துறையில் அமைந்துள்ளது. அதாவது ஏறாண் முல்லை என்பது ஏறு (சிங்கம்) போன்ற ஆண் மகனின் இருப்பு நிலை ஆகும்.
“புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே”
எனப் பாடுகின்றார். இந்தப் பாடலின் பொருளானது “என் சிறு வீட்டின் தூணைப் பற்றி நின்று நின் மகன் எங்கே உள்ளான்? என்று கேட்கின்றாய் என் மகன் எங்கு உள்ளானோ யான் அறியேன்? புலி கிடந்து பின் வெளியே போன கல்லளை அதாவது கற்குகை போல அவனைப் பெற்ற வயிற்றினை இதோ பார். அவன் போர்க்களத்தில் வந்து தோன்றுவான். அவனை அங்கே போய்க் காண்பாயாக! நீ இங்கு வந்து தேடத் தேவையில்லை.” என ஒரு வீரத் தாய் கூறுவதாக காவற்பெண்டு கூறுகின்றார். இது காவற்பெண்டு என்ற பெண் புலவர் தான் கண்ட ஒரு காட்சியோ அல்லது மறக்குடியில் பிறந்து வளர்ந்த காவற்பெண்டுக்கு ஏற்பட்ட அந்த வரலாற்று நிகழ்வோ என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புறநானூறு 279
ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்புலவர் மறக்குடி மங்கையரைப் பற்றி இதில் பாடுகின்றார். “மூதின் முல்லை” எனும் துறையில் இந்தப் பாடல் அமைந்திருக்கின்றது. “மூதின் முல்லை” என்பது மறக்குடியில் ஆடவரைப் போலவே மகளிருக்கும் வீரமுண்டு என்பதை காட்டுவதாகும். ஒக்கூர் மாசாத்தியார் அக்காலம் தொடக்கம் இன்றுவரை பெரும் வீரத்திற்கு வித்திட்டவர். சிவகங்கையில் உள்ள ஓக்கூர் கிராமத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவருக்கு ஒரு நினைவுச் சின்னம் இன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவர் எட்டுப் பாடல்களை சங்க இலக்கியத்தில் பாடியுள்ளார்.
மீதி ஏழு பாடல்களுமே அகநானூறு, குறுந்தொகையில் அமைந்த அகத்திணையான காதல் ஒழுக்கம் சார்ந்தவை. ஒரே ஒரு பாடலை மட்டும் புறத்திணையில் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்களின் வீரம் பற்றிப் பாடியிருக்கிறார். இந்த ஒரே பாடலுக்காக மட்டும் மிகவும் பிரபல்யமாக அறியக்கூடியவர்.
“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமோ”
என அந்தப் பாடல் வருகின்றது.
பழைய மறக்குடி மகள் இவள் என்பது பொருத்தமானது. முன்னர் நடந்த போரில் யானையை வென்று தகப்பன் அதனால் இறந்தான். இவள் கணவன் திரளான ஆநிரைகளை அதாவது ஆடு மாடுகளைக் காத்து அப்போரில் இருந்தான். இதோ போர்ப்பறை கேட்கின்றது. தன் ஒரே மகனின் குடுமிக்கு வெண்ணெய் தடவி, வெள்ளாடை உடுத்தி, கையிலே வேல் கொடுத்து, போர்முனை நோக்கிச் செல்க! எனக் கூறி அனுப்புகின்றாள். என்னே இவள் பண்பு? என்று அன்றைய காலத்தில் தான் கண்டதை எமக்குக் காட்சிப்படுத்துகின்றார்.
புறநானூறு 278
காக்கைபாடினார் நச்செள்ளையார் (நச்செள்ளையார் என்பது இவரின் இயற்பெயர்) எனும் பெண் புலவர் இந்த பாடலை பாடியிருக்கின்றார்.
“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்”
என அந்தப் பாடல் வரிகள் வருகின்றன. அதாவது வீரன் ஒருவன் போரில் பகைவர்களின் வாளால் வெட்டப்பட்டு இறந்தான். அவன் எவ்வாறு இறந்தான் என அறியாதவர் பலர், அவனுடைய தாயிடம் சென்று “உன் மகன் பகைவற்கு புறமுதுகு காட்டிப் போரில் இறந்தான்” என்று பொய்யாகக் கூற அந்த வயதான தாய் “அவன் புறமுதுகு காட்டி இருப்பானாகின் அது என் மறக்குலத்துக்கு இழுக்கு ஆதலால் அவன் பால் குடித்த என் முலைகளை அறுத்தெறிவேன்” என வஞ்சினமுரைத்தாள்.
பின்னர் போர்க்களம் சென்று தனது மகன் புற முதுகு காட்டவில்லை என்பதை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொண்டாள். அதைக் கண்ட காக்கை பாடினியார் நச்செள்ளையார் அத்தாயின் வீரத்தை வியந்து தனது பாடலில் பாடுகின்றார். இவர் 12 பாடல்களைப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்திலும், புறநானூற்றிலும் வீரம் செறிந்த பாடல்களாக அவை இருக்கின்றன.
மயிர்க் கூச்செறியும் மறக்குடி மகளிரின் வீர வரலாற்றை பெருமையுடன் எமது மனக்கண் முன் காட்சியாகக் கொண்டு வந்தோம். அஞ்சா நெஞ்சத்துடன் பதிவிட்ட பெண் புலவர்களை நோக்கினோம். அதுபோல அண்மைய காலத்தில் நடந்த ஈழப் போரில் புலி தங்கிய வயிறுகளின், வீரமங்கையரின் வரலாற்றுப் பதிவுகள் மென்மேலும் வெளிவந்து ஆவணங்களாக, எதிர்கால இலக்கியப் பதிவுகளாக ஆண்டாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்பது எமது பேரவா.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்