சங்க காலத் தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் பூக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த மாவீரர் நாளில் குறிப்பாக செங்காந்தள் பூவைப் பற்றிய இந்தச் சிறப்புப் பதிவு பகிரப்படுகின்றது.
பண்டைய தமிழர் தங்களது ஒவ்வொரு வாழ்வியல் நிலைகளிலும் ஒவ்வொரு பூக்களை அணிந்தே தமது செயல்களைச் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். எமது ஐவகை நிலங்களுமே ஒவ்வொரு பூக்களின் பெயர்களிலேயே அதாவது குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று அழைக்கப்படுகின்றன.
அதுபோலவே புறத்திணைகளும் பூக்களை கொண்டு அமைந்திருக்கின்றன. அவையாவன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி போன்ற பூக்களாகும். உதாரணமாக வாகைத் திணையை எடுத்துக் கொண்டால் இது வெற்றி பெற்ற மேல் நிலையைக் குறிக்கும். வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடியே வெற்றியைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் இன்றும் வெற்றி என்றால் அடுத்து வாகை என்ற சொல்லை சேர்த்தே கூறுகின்றோம்.
குறிஞ்சிப்பாட்டு
இந்த இலக்கியத்தைப் படைத்த கபிலர் 99 வகை மலர்களின் பெயர்களை குறிப்பிடுகின்றார். தினைப்புனம் காக்க வந்த தலைவியும் தோழிகளும் இசைக்கருவிகளை இசைத்து கிளிகளை விரட்டினர். பெருமழை பெய்ததால் கிளிகள் வரவில்லை. தலைவியும் தோழிகளும் நீராடச் சென்று பாறையில் 99 வகையான பூக்களை பறித்துக் குவித்தனர். அதாவது மலை எருக்கு, சிவந்த கோடல், ஆம்பல், அனிச்சம் போன்ற 99 வகை மலர்களைக் குவித்தனர். அவ்வேளையில் முருகன் போன்று அழகிய தலைவன் அங்கு வந்தான், எனக் காதல் நிலையை விளக்குவதாக இந்த இலக்கியம் அமைந்திருக்கிறது .
அடுத்துக் குறிப்பாக கார்த்திகைப் பூ என்னும் காந்தள் மலரை எடுத்துக் கொண்டால் இவை வெண்காந்தள், செங்காந்தள் என இரு வண்ணங்களில் காணப் படுகின்றன. செங்காந்தள் மலர் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் 64 இடங்களில் இடம் பிடித்திருக்கின்றது. அது போலவே பத்துப்பாட்டு நூல்களிலும் ஏழு நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.
ஒண் செங்காந்தள், முகை அவிழ்ந்த காந்தள், சுடர்ப்பூங் காந்தள், தண்ணறுங் காந்தள் எனவும் அழகிய பெயர்கள் கொண்டு புலவர்கள் பாடி இருக்கின்றார்கள்.
இந்த செங்காந்தள் பூவுக்கு இலாங்கலி, கோடை, தோன்றி, தோட்டி போன்ற பல பெயர்களும் உள்ளன. பெண்களின் சிவந்த மெல்லிய விரல்களுக்கு இதை உவமையாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.
குறிஞ்சி நில மக்கள் இந்த செங்காந்தள் மலரைப் பறித்து மாலையாகத் தொடுத்து முருகப் பெருமானுக்கு விரும்பிச் சூட்டி வழிபட்டு வந்திருக்கின்றனர். செங்காந்தளின் அரும்புகள் இளம் பச்சையாகத் தோன்றி மலர்ந்து விரிந்த பின் மஞ்சள் நிறமாகி, இறுதியாக நெருப்பை ஒத்த சிவந்த நிறத்தில் காணப்படும்.
இதனால் தான் பத்துப்பாட்டு நூலில் ஒன்றான மலைபடுகடாம் எனும் இலக்கியத்தில் பெருங்கௌசிகனார் எனும் புலவர் “தீயினன்ன ஒண் செங்காந்தள்” என்று பாடுகின்றார். பார்ப்பதற்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போல காட்சி தருகின்றது என்கின்றார்.
செங்காந்தள் மலரைப் பார்த்து
வெருண்டோடிய யானை
பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றான “கைந்நிலை” என்ற இலக்கியத்தைப் படைத்த புல்லாடனார் எனும் புலவர், “காந்தளரும்புகை என்று கதவேள மேந்தன் மருப்பிடை கைவைத்தின் னோக்கிப் பாய்ந்தெழுந்தோடும்” எனப் பாடுகின்றார். குறிஞ்சி நிலத்தில் கார்காலத்தில் மழை பொழிந்து பச்சைப் பசேல் என்று இருந்தது. ஒரு இடத்தில் மட்டும் காட்டுத் தீ போல செங்காந்தள் மலர்கள் பூத்திருந்தன. கூட்டத்தில் இருந்து வந்த ஒரு யானை, தனது தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு செங்காந்தள் மலர்களைப் பார்த்து தீப் பிழம்பென நினைத்து மருண்டு வெருண்டோடியதாகப் பாடுகின்றார்.
புலியைக் கூட தாக்கும் வலிமை பொருந்திய பெருத்த யானை அடர்த்தியாகப் பூத்திருக்கும் செங்காந்தள் மலர்களுக்கு அஞ்சியது எனப் புலவர் கூறுவது இயல்பாகத் தீயைக் கண்டு அஞ்சும் சுபாவம் கொண்டது யானை. அதனால் தான் இந்த தீச்சுடர் போன்ற மலர்களைக் கண்டு பயந்து ஓடுவதாக பாடுகின்றார்.
இவ்வளவு பெருமை மிக்க இந்த செங்காந்தள் பூவானது தமிழீழத் தேசிய மலராகவும், தமிழ் நாட்டின் மாநில மலராகவும், சிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் விளங்குகிறது.
2000 வருடங்களுக்கு முன்னரே எம் வாழ்வியலில் பெருமையுடன் இணைந்து வருவது, இலக்கியங்களில் பூக்களின் அரசி, கார்காலத்தில் பூத்துப் பெருத்த உருவத்தையும் கிலி கொள்ளச் செய்வது, தேசியக் கொடியின் வண்ணத்தைக் கொண்டது, பல நோய்களுக்கு நிவாரணி, தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் பெரிதும் விரும்புவது, தொன் நெடும் காலமாக நமது மூதாதையர் பூசித்து வந்தது, அகல் விளக்கில் தீச்சுடர் போல தோன்றிப் பிரகாசிப்பது,… இன்று எமக்காகச் சுடராகி நிற்கும் மாவீரர்களின், அக்கினிக் குஞ்சுகளின் அஞ்சலிக்காக கார் காலத்தில், காரிருளில் பூத்து தன்னை அர்ப்பணிக்கின்றது தீப் பிழம்பு போன்ற இந்த செங்காந்தள் பூ..
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்