சங்ககாலத்தில் நில உடமைச் சமுதாயமாக இருந்த பெண் வழிச் சமுதாயம் அன்று உயர்ந்த நிலையில் இருந்திருக்கின்றது. அத்தோடு வளத்தைப் பெருக்குவதும் இனத்தைப் பெருக்குவதுமாக பெண்ணும் மண்ணும் இருந்ததால், சங்க காலத் தமிழர் மண்ணையும் பெண்ணையும் வழிபட்டு வந்திருக்கின்றனர். அதனால் அன்று பெண் தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்ததை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த சிறப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் வழி இந்தப் பதிவில் ஆய்ந்து நோக்கலாம்.
முதன் முதலில் பெருங் கற்காலப் பண்பாட்டில் தாய்த் தெய்வ வழிபாடு உலகம் முழுதும் இருந்திருக்கின்றது. மக்களுக்கு எழுதத் தெரியாத காலத்திலேயே தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடக்கமாக பெருங்கற்காலத்தில் அமைந்த ஈமச்சின்னங்களில் தாய்த் தெய்வ உருவங்களை வரைந்து இருக்கின்றனர். அப்படியான ஒரு ஈமச்சின்னம் இன்னும் வேலூர் மாவட்டத்தில் “மேட்டூர்” என்னும் இடத்தில் இன்னும் உள்ளது. தாய் வடிவத்திலான ஈமச் சின்ன இடுதுளை “கொடுமணல்” அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈமத்தாழிகளில் தாய்த் தெய்வ உருவங்கள் வழமைச் சின்னமாக இருப்பதை பல அகழாய்வுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த பெருங் கற்காலத்தின் தொடர்ச்சியாக சங்ககாலம் இருந்திருக்கின்றது என்பது அறிஞர்கள் கூற்று. அதனால் தான் இந்த அகழாய்வுகளின் தொடர்ச்சியாக பல சங்க இலக்கியப் பாடல்களில் தாய்த் தெய்வ வழிபாட்டுக் குறிப்புகளை நாம் காணலாம்.
சங்க இலக்கியங்களில் தாய்த் தெய்வத்தை அல்லது பெண் தெய்வத்தை கொற்றவை, பழையோள், அணங்கு, இயக்கி, ஐயை, அவ்வை, கானமர் செல்வி, பெருங்காட்டுக் கொற்றி, காடு கிழாள் என்ற பல பெயர்களில் பாடி இருக்கின்றனர்.
கொற்றவை என்றால் வெற்றி தரும் அம்மை என்ற பொருள்படும் . இனி இதற்கு சில சங்க இலக்கியப் பாடல்களை சான்றாகக் காணலாம்.
அகநானூறு 158
“வேண்டு உருவில் அணங்குமார் வருமே”
எனக் கபிலர் பாடுகின்றார். அதாவது நம் தோட்டத்தில் சூர் மகள் வாழும் காடு உள்ளது. அங்கு சுடரும் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு அங்கு தெய்வம் வரும் என்ற பொருளில் இந்தப் பாடல் வருகின்றது.
அகநானூறு 345
“ஓங்கு புகழ் கானமர் செல்வி அருளின்” என குடவாயிற் கீரத்தனார் பாடுகின்றார். அதாவது கானமர் செல்வியின் அருளால் வேங்கை மாலை சூட்டுகிறேன். சிறிது நாள் பொறுத்திரு எனத் தலைவன் தலைவிக்கு கூறுவதாக இந்தப் பாடல் அமைகின்றது. கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுளாக கொற்றவை இருந்திருக்கின்றாள் என்பது இந்தப் பாடல் வழி புலனாகின்றது.
கலித்தொகை 89
“பெருங்காட்டு கொற்றிக்கு பேய் நொடித்தாங்கு” என்று இந்த பாடல் வருகின்றது. தலைவன் தலைவியிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவது போல இந்த பாடல் அடிகள் அமைகின்றன. பெருங்காட்டு கொற்றவைக்கு பேய் நொடி செல்வது போல வஞ்சக வார்த்தை தலைவன் கூறுகிறான் என வருகின்றது.
மேலும் திருமுருகாற்றுப்படை 257 வது அடியில் “வென்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பின் பழையோள் குழவி “எனப்படுகின்றது. அதாவது வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின் மைந்தனே! அணிகலன் அணிந்த காடுகிழாளின் குழந்தையே முருகா! என்ற பொருளில் இந்தப் பாடல் வருகின்றது. போர்க்களத்தில் வெற்றியைத் தருவதும், பழையோள் என்பதில் தொன்மையான பெண் தெய்வம் என்பதும் இப்பாடல் மூலம் தெரிய வருகின்றது.
அதுபோலவே பதிற்றுப்பத்து பாடல் வரிகள் அயிரை என்ற பெண் தெய்வத்தைப் பற்றிப் பேசுகின்றன.
பரிபாடல் 11-ல் “நெற்றிவிழியா நிறைத் திலகம் இட்டாளே கொற்றவைக் கோலம் கொண்டு ஒரு பெண்” என்று வருகின்றது.
சங்கம் மருவிய காலத்தில் வந்த சிலப்பதிகாரத்தில் கூட பல இடங்களில் பெண் தெய்வ வழிபாடு வருகின்றது. வேட்டுவ வரியில் காளி தெய்வம், இசக்கி தெய்வத்தின் வழிபாட்டு குறிப்புகளும் வருகின்றன.
அவ்வாறே 12 ஆம் நூற்றாண்டில் எழுந்த கலிங்கத்துப்பரணியில் ஜெயம் கொண்டார் என்ற புலவர் பாடிய கலிங்கத்துப்பரணியில் காடு பாடியது எனும் பகுதியில் “காளிக்கு கூளி” சொல்லியது என்ற பகுதி வருகின்றது. அதாவது கலிங்கத்துப் போர் நடவடிக்கைகளை ஒரு பேய் காளியிடம் கூறுவதாக வருகின்ற.து ‘காடு பாடியது” என்னும் பகுதியில் போர்த் தெய்வமாகிய காளி வாழும் காட்டை விபரித்தும், “கோயில் பாடியது” என்ற பகுதியில் காளி தேவியின் கோயிலை வர்ணித்தும் கலிங்கத்துப்பரணி இலக்கியத்தில் நாம் காணலாம்.
தொல்காப்பியம் கூறும் புறத்திணை யான வெட்சித் திணையில் வரும் துறை ஒன்றில் “கொற்றவை நிலை” என்று வருகின்றது அதாவது பகைவர்களுடைய ஆநிரைகளை (பசுக்களை) கவரப்போகும் முன்னர் கொற்றவையிடம் மறவர்கள் அருள் வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
பாலை நிலத் தெய்வமாக கொற்றவை அன்று இருந்திருக்கின்றாள். போருக்கு செல்லும் முன்னர் மக்கள் வெற்றி வேண்டி கொற்றவையை வழிபட்டு செல்வர். அந்தத் தாய்த் தெய்வத்திற்கு துவரை, இறைச்சி போன்றவற்றை படையலிட்டு வழிபட்டு வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக தொன் நெடும் காலமாக பெண் தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்து வந்திருந்தாலும் காலப் போக்கில் தாய் வழிச் சமுதாயமான நில உடைமைச் சமுதாயத்தின் உயர்ந்த நிலை குன்றியதும், ஆரியத் தாக்கத்தாலும் பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மை நிலை குறைந்து வந்தது வேதனையே. பின்னர் பெருந் தெய்வ வழிபாடாக இருந்து வந்த தாய்த் தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடாகவும் மாறியது. அதுக்கு சான்றாக இன்றும் கிராமப்புற தெய்வங்களில் பெண் தெய்வ வழிபாடு கூடுதலாகக் காணப்படுகிறது. உதாரணமாக இசக்கியம்மன் (பெண் தெய்வமான இயக்கி என்ற சங்க இலக்கியச் சொல் மருவியுள்ளது.) என்ற பெயரில் இன்றும் மக்கள் வழிபடுவதை நாம் காணலாம் .
இந்தப் பதிவானது தொன் நெடுங்காலம் தொடக்கம் இன்று வரை கொட்டிக் கிடக்கும் தாய்த் தெய்வ வழிபாட்டின் விழுமியங்களின் தேடல்களைத் தூண்டுவதாக அமையும் என நம்புகிறேன்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்