
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள எனது பேரக்குழந்தைகளை நேரில் காண முடியவில்லை எனக் கூறும் Mike Griffin எனும் ஆஸ்திரேலியர், சர்வதேச எல்லைகளை ஆஸ்திரேலியா திறந்ததும் எமது பாசத்திற்குரியவர்களை மீண்டும் காணுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். ஆனால், அந்த வாய்ப்பு தற்காலிக விசாவில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு இல்லை என வருந்துகிறார்.
ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கள் குடும்பங்களுடன் இணைவதற்கான அனுமதி கிடையாது. அத்துடன் தடுப்பு முகாம்களிலும் கொரோனா தொற்று உள்ள ஹோட்டல்களிலும் நூற்றுக்கணக்கான அகதிகள் சிக்கியுள்ளதாக Mike Griffin வருத்தத்துடன் பதிவுச் செய்திருக்கிறார்.
நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களது குடும்பத்தவர்களை சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்னும் ஆஸ்திரேலிய அரசின் முடிவால், அவர்களது துன்பம் காலவரையின்றி நீட்டித்துள்ளது.