Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் கடும் வெப்பம்; அதிகரிக்கும் காட்டுத் தீ சம்பவங்கள்!

கனடாவில் கடும் வெப்பம்; அதிகரிக்கும் காட்டுத் தீ சம்பவங்கள்!

0 minutes read

கனடாவில் தற்காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது.

இதனால் அங்காங்கே காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா முழுவதும் தற்போது 413 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அவற்றுள் 249 இடங்களில் நெருப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.

மேற்கே உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து (British Columbia) கிழக்குக் கடற்கரையின் நோவா ஸ்கோஷா (Nova Scotia) வரை 3 மில்லியன் ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பைவிட அது 12 மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

காட்டுத் தீ காரணமாக, சுமார் 26,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அல்பர்ட்டா (Alberta),நோவா ஸ்கோஷா மற்றும் கியூபெக்(Quebec) ஆகிய மாநிலங்கள், மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More