Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர் மக்கள்!

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர் மக்கள்!

1 minutes read

கனடா நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது வெளிநாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்கள் தான்.

இந்நிலையில், அந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் அதிகளவில் வெளியேறுவது கனடா நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கனடாவில் நீண்ட காலமாகவே வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் குடியேறியவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

1980களில் இருந்து கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது பெரிய விஷயமாக பார்க்கப்படாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் கனடாவில் பல பிரச்சினைகள் எழுந்து வரும் காரணத்தால் கனடாவிற்கு செல்வோர் விகிதத்தில் கணிசமான தடுமாற்றமும், வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் கனடா நாட்டிற்கு புதிதாக வந்தவர்கள், அந்நாட்டிற்கு செல்வதால் நன்மைகள் இல்லை என்று நம்பலாம் என கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் நடத்திய புலம்பெயர்ந்த மக்களை தக்கவைப்பது குறித்த ஆய்வறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியான இந்த ஆய்வறிக்கையில் கனடா நாட்டிற்கு புதிதாக வந்த வெளிநாட்டவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் ஏற்படும் அபாயங்கள் தான் அதிகப்படியான வெளியேற்றத்திகற்கான காரணமாக இருக்கலாம் என்பதை காட்டுகிறது.

மேலும், கனடாவில் புதிதாக வரும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் மோசமான வீட்டு வசதி, கடினமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வேலையின்மை போன்றவையும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மறுமுனையில் கனடா அரசு ப்ளூ காலர் முதல் வொயிட் காலர் வரையில் அனைத்து பிரிவுகளிலும் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் முக்கியமான விசா மாற்றங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More