Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மக்கள் ஆதரவை இழந்து வரும் கனடா பிரதமர்!

மக்கள் ஆதரவை இழந்து வரும் கனடா பிரதமர்!

0 minutes read

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களின் ஆதரவை இழந்து வருகின்றார் என அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பலர் அரசாங்கத்தின் மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்றில் இரண்டு கனடா மக்கள், பிரதமர் மீது பாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதமர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், சுகாதார நலன், அரசாங்கச் செலவுகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பதாகவே பிரதமர் பதவி விலக வேண்டும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More