Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மகிழ்ச்சியான நாடுகள்; இரண்டாவது இடத்தைப் பிடித்தது கனடா!

மகிழ்ச்சியான நாடுகள்; இரண்டாவது இடத்தைப் பிடித்தது கனடா!

1 minutes read

2024ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

G7 நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை World Happiness Report கணக்கிட்டுள்ளது.

இதில் கனடா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், அதில் கனடா 15ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், இதில் ஏனைய அனைத்து G7 நாடுகளையும் விட உயர்ந்த இடத்தில் (2ஆம் இடம்) கனடா இருக்கிறது.

30 வயதிற்குட்பட்டவர்களின் பிரிவில் கனடா 5ஆவது இடத்தில் உள்ளது. இதில் G7 நாடுகளின் அமெரிக்கா மற்றும் ஜப்பான் பின்தங்கியுள்ளன.

அதேபோல் 30 முதல் 44 வயது வரை பிரிவில் கனடா G7இல் 4ஆவது இடத்திலும், 45 முதல் 59 வயது வரை பிரிவில் கனடா G7இல் 2ஆவது இடத்திலும் உள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் கனடா G7இல் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More