செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உணவகத்தில் 19 வயது யுவதியின் சடலம் மீட்பு; கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

உணவகத்தில் 19 வயது யுவதியின் சடலம் மீட்பு; கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

0 minutes read

உணவகம் ஒன்றிலிருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம், கனடா – ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யுவதி, மேற்படி உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் யுவதி பிணமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணித்த யுவதியின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சனிக்கிழமை இரவு முதல் குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.