காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை மறுதினம் காணொளி தொடர்பாடல் வாயிலாக நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்றத்தில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது. மொத்தம் 18 நாட்களுக்கு இந்தக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

முதன்முறையாக, மக்களவையும் மாநிலங்களையும் இரு வெவ்வேறு அமர்வுகளில் நடக்கவுள்ளதுடன், தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்படவுள்ளன.

ஆசிரியர்