கொரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டமூலத்தை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார்.
கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 7-ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.