குற்றவழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உத்தரவு

இந்தியா முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் 2 ஆயிரத்து 500 பேர் மீதான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் குறித்த வழக்குகளை விசாரணை செய்ய உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு  அவசியமற்ற ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி வழக்குகளை விசாரணை செய்யும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்குகள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் உச்சநீதிமன்றம் இதன்போது அறிவுறுத்தியுள்ளது

ஆசிரியர்