நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கைதான்- தி.மு.க.வின் கேள்விக்கு மத்திய அரசு திட்டவட்ட பதில்

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மக்களவையில் மத்திய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தமை குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் மூன்றாவது மொழியாக எதைக் கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது மொழி என்னவென்பது மாநில அரசுகளின் விருப்பம் என்றும் எந்த மொழியும் திணிக்கப்படாது எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர்