வங்க கடலுக்குள் நுழையும் ‘நவுல்’ புயல் – வட மாவட்டங்களில் கன மழை

தாய்லாந்தில் நிலவும் ‘நவுல்’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது.

இதன் காரணமாக வட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டியில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.

வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகள், புதுச்சேரி ஆகியவற்றில் மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இதற்கிடையில் தாய்லாந்தில் நிலவும் ‘நவுல்’ புயல் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிஇ நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுஇ ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில், மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் மத்திய, தெற்கு மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் பலத்தக் காற்று வீசும். எனவே, இன்னும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள், அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்