Wednesday, October 21, 2020

இதையும் படிங்க

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம்...

வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த ஊழியருடன் நெருங்கிப் பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த...

’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.” இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.

ஆசிரியர்

16 மொழிகளில் 45,000 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பி- கடந்து வந்த பாதை

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சுருக்கி எஸ்.பி.பி என்று சொல்வதற்கான விளக்கம், ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இது அவரது முழு பெயர். 1966ல் தனது 20வது வயதில் பாடத் தொடங்கினார். பாடகர் மட்டுமின்றி இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டிருந்தார். அவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கியது. இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால், ஒருவரை ஒருவர் ‘வாடா, போடா’ என்று செல்லமாக பேசிக்கொள்வார்கள். சைவ உணவை விரும்பி சாப்பிட்ட எஸ்.பி.பி., 5 நிமிடங்களில் சாப்பிட்டு விடுவார். மிகவும் விருப்பமான உணவு, தயிர் சாதம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் மேற்கொள்ளாமல் இருந்தார். குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு உள்பட அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்.

கேளடி கண்மணி படத்தில் ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலையும் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்தினார்.எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, கே.ஜே.யேசுதாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியை மட்டும் கேட்கவே முடியாது என்று பாராட்டுவார். கர்நாடக இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பியின் தணியாத தாகம். மிகவும் பிடித்த இசை அமைப்பாளர், இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை மீது அதிக மரியாதை இருந்தாலும், ‘ராஜா… எப்பவும் என் ராஜாதான்’ என்று பாசத்துடன் சொல்வார்.

ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த ”மழை” என்ற படத்துக்காக எஸ்.பி.பி ஒரு பாடலை பாடினார். அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து பாடிவிட்டு வெளியேறிய சம்பவம், வெறும் 12 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது ஆட்டோகிராஃப் போட்ட பேட் ஒன்றை பரிசளித்தார்.

தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த துடிக்கும் கரங்கள் படம் முதற்கொண்டு பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், எஸ்.பி.பி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், முதலில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர் எஸ்.பி.பி. இதற்காக பாரதிராஜா எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்துவிட்ட எஸ்.பி.பி., பாட்டு பாடுவதில் தான் இருக்கும் பிசியில், தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

ரஷ்யாவை தவிர எஸ்.பி.பி சென்று வராத நாடுகளே இல்லை. எஸ்.பி.பி ஓவியங்கள் வரைவார். புல்லாங்குழல் வாசிப்பார். எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடனேயே இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட் மற்றும் உணவு, உடல்நலம் ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டது அவர்தான்.

தெலுங்கு படங்களில் சில ‘ராப்’ பாடல்கள் எழுதியுள்ளார், எஸ்.பி.பி. ‘பாடலாசிரியர்கள் சரியாக அமையாவிட்டால், நீங்களே எழுதிவிடுங்கள் பாலு’ என்று பல இசை அமைப்பாளர்கள் அவரை வற்புறுத்தியது உண்டு.

கடந்த 30 வருடங்களில் அதிகமான விமான பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமைக்குரியவர், எஸ்.பி.பி. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என அடிக்கடி பறந்துள்ளார்.

எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட அவருக்கு தெரியாமலேயே நண்பர் ஒருவர் பெயர் கொடுக்க, வேறு வழியில்லாததால் அந்த போட்டியில் கலந்துகொண்டு பாடினார் எஸ்.பி.பி. ஆனால், எதிர்பார்த்த பரிசு கிடைக்கவில்லை. போட்டியின் நடுவராக இருந்த இசை அமைப்பாளர் கோதண்டபாணி, ‘உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்துவிடுகிறேன்’ என்று உற்சாகப்படுத்தி, எஸ்.பி.பியை நிறைய இசை அமைப்பாளர்களிடம் அழைத்து சென்றார். தனக்காக மற்றவர்களிடம் வாய்ப்பு கேட்ட கோதண்டபாணியை மறக்காத எஸ்.பி.பி., சென்னை வடபழநியில் கட்டிய ரெக்கார்டிங் தியேட்டருக்கு கோதண்டபாணி ஆடியோ ரெக்கார்டிங் தியேட்டர் என்று பெயர் சூட்டினார்.

தெலுங்கு சங்கம் ஒன்றில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பரிசு வாங்கியிருந்த எஸ்.பி.பி., 3வது ஆண்டும் வெற்றிபெற்றால் பெரிய வெள்ளிக்கோப்பை பரிசு கிடைக்கும். இந்நிலையில், 3வது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ்.பி.பி.யை 2வது பரிசுக்கு தள்ளிவிட்டனர். நீதிபதிகளின் முடிவை மனதார ஏற்றுக்கொண்டார், எஸ்.பி.பி. பரிசளிப்பு விழாவுக்கு பிரபல பின்னணி பாடகி தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாட மேடைக்கு அழைத்தனர். முதல் பரிசு பெற்ற இளைஞர், போட்டியில் பாடிய அதே பாடலை பாடினார். 2வது பரிசு பெற்ற எஸ்.பி.பி தனது பாடலை பாடி முடித்தார். பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் பயங்கர கோபம். அவரே மைக் முன்னால் வந்து, ‘2வது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட நன்றாக பாடினான். எனவே, போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று சொல்லி, எஸ்.பி.பிக்கு முதல் பரிசு மற்றும் வெள்ளிக்கோப்பையை வாங்கிக் கொடுத்தார். பிற்காலத்தில் அந்த பாடகியுடன் இணைந்து பல பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. அவர், எஸ்.ஜானகி.

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலை எஸ்.பி.பி பாட முக்கிய காரணம், எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாட வேண்டிய தினத்தில், கடுமையான காய்ச்சலில் படுத்திருந்தார் எஸ்.பி.பி. இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., உடனே ரெக்கார்டிங்கை ரத்து செய்தார். இந்த விவரம் தெரியாத எஸ்.பி.பி., தனக்கு பதிலாக வேறொருவர் பாடியிருப்பார் என்று நினைத்தார். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கார் தன்னை அழைக்க வந்தபோது கண் கலங்கிய எஸ்.பி.பி., தன்னை போல் பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம்.ஜி.ஆர் 2 மாதங்கள் வரை காத்திருப்பாரா என்று நம்ப முடியாமல் இருந்தார். ரெக்கார்டிங் முடிந்த பிறகு தன்னை சந்தித்து நன்றி சொன்ன எஸ்.பி.பியை தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘தம்பி… என் படத்துல ஒரு பாட்டு பாடப் போறீங்கன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லியிருப்பீங்க. உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் அடிமைப்பெண் படத்தில் உங்க பாடலை ஆர்வமா எதிர்பார்ப்பாங்க. இந்த நிலமையில் உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை பாட வெச்சா, அது உங்களுக்கும், உங்க நண்பர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமா இருக்கும். அப்படி செய்ய நான் விரும்பலை. அதனால்தான் உங்களுக்காக இந்த பாட்டு காத்திருந்தது’ என்றார்.

நன்றி தினகரன்

இதையும் படிங்க

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

தொடர்புச் செய்திகள்

எஸ்.பி.பி-யைக் குறித்து அரிய தகவல்

கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பி-யைக் குறித்து பலருக்கும் தெரியாத விடயத்தினை இங்கு காணலாம். பாட்டுடைத் தலைவன், களிப்பும் காதலும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம்...

வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த ஊழியருடன் நெருங்கிப் பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

மேலும் பதிவுகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது யாழ்...

தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த...

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

மெட்ரோ ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும்!

மும்பையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்னதாக ஆயிரத்து 350 பேரை ஏற்றிச் சென்ற இந்த ரயில்களில்...

ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக மாட்டார்கள்?

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு பட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். பணத்திற்காக சோரம் போனவர்களென சமூகம்...

மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் 105...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு