Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒரு விமானியின் கதை | ஆஷா – ஆதம் ஹாரியாக மாறிய திருநம்பி

ஒரு விமானியின் கதை | ஆஷா – ஆதம் ஹாரியாக மாறிய திருநம்பி

3 minutes read

எப்படியாவது ஒரு தொழில் முறை பைலட்(Commercial Pilot) ஆகிய வேண்டும் என்ற அவரது லட்சியம் முடங்கி விடும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு.. Commercial Pilot பயிற்சி நிலையங்களை இவர் சென்று விசாரித்த போது, மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவருக்கு பயிற்சி அளிக்க முடியாது என்று மறுத்தது மட்டுமல்ல அந்த பயிற்சிக்கு 25லட்சம் ரூபாய் தேவைப்படும் என்ற உண்மையும் உறைத்தது அவருக்கு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்ஞலக்குடா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆயிஷா… தனது இளம் வயதிலேயே தனக்குள்ளே ஒரு ஆண் மகன் வளர்ந்து வருவதை உணர்ந்திருந்தார் ஆயிஷா.. ஆனாலும் அச்சம் காரணமாக வெளிப்படுத்தவில்லை…

தொடர்ந்து படித்தார் ஆயிஷா…+2 படித்து தேறிய உடனே, தென் ஆப்பிரிக்க ஜோகன்னஸ்பர்க் Flying Clubல் சேர்ந்து படித்தார்… இந்த நிலையில் ஆயிஷாவின் குரல் ஆண் குரலாக மாறி, அரும்பு மீசையும் முளைக்க துவங்கியது.. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வந்ததோடு ஆயிஷாவின் வீட்டிற்கும் தகவல்கள் சென்று சேர்த்தன..

பயிற்சி முடிந்த ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஆயிஷா, தனது சொந்த வீட்டில் மிகக்கடுமையான சித்திரவதைகளை எதிர் கொள்ள நேர்ந்தது.. ஒரு வருடம் காலம் ஆயிஷா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.. உறவினர்களும் ஊர் காரர்களும் கூட சேர்ந்து அவரை தனிமைப்படுத்தினார்கள்..

வேறு வழி இல்லாமல் ஆயிஷா வீட்டை விட்டு தப்பி ஓடி, ரெயில்வே ஸ்டேஷன்களிலும் கடைத் திண்ணைகளிலும் தூங்கி, கிடைத்த வேலைகளை செய்து, ஹார்மோன் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

தனது பெயரையும் ஆதம் ஹாரி என்று மாற்றிக் கொண்டார்…

பொதுவாக மூன்றாம் பாலினம் என்றாலே பாலியல் தொழில் தான் செய்வார்கள் என்ற பொதுப் புத்தியை உடைக்க வேண்டும் என்ற உறுதியோடு அழகு நிலையங்களிலும், ஜுஸ் கடைகளிலும் வேலை செய்தார்… ஆனாலும், ஜோகன்னஸ்பர்க் பயிற்சி மட்டும் போதாது; எப்படியாவது ஒரு தொழில் முறை பைலட்(Commercial Pilot) ஆகிய வேண்டும் என்ற அவரது லட்சியம் முடங்கி விடும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு.. Commercial Pilot பயிற்சி நிலையங்களை இவர் சென்று விசாரித்த போது, மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவருக்கு பயிற்சி அளிக்க முடியாது என்று மறுத்தது மட்டுமல்ல அந்த பயிற்சிக்கு 25லட்சம் ரூபாய் தேவைப்படும் என்ற உண்மையும் உறைத்தது அவருக்கு..

இந்த நிலையில்,கடந்த ஆண்டு, தனது சக திருநங்கைகள்/திருநம்பிகள் கூறிய ஆலோசனையின் படி, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தோழர்.K.K.ஷைலஜா டீச்சர் அவர்களை சந்தித்து, தனது நிலையை முன் வைத்து, தனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், ஆதம் ஹாரி….

“K.K. ஷைலஜா டீச்சர், சிரித்துக்கொண்டே, (நமக்கு பறக்கண்டே) நமக்கு பறக்க வேண்டாமா”என்று கேட்டதை நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார் ஆதம் ஹாரி…

பிறகென்ன, மளமளவென்று எல்லாம் நடந்து முடிந்தது…

ஆதம் ஹாரி, திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி Academy for Aviation Technologyயில் Commercial Pilot படிக்க அட்மிஷன் கிடைத்தது ஆதம் ஹாரிக்கு…

மூன்று வருடங்கள் படிப்பதற்கு 25 லட்சம் ரூபாய் செலவு…

இந்த தொகையில் 23,34000 ரூபாயை சமூக நீதித்துறையின் Plan Fundலிருந்தும் மீதித் தொகையை, We Care நிதியிலிருந்தும் வழங்கும் உத்தரவை பிறப்பித்தார் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தோழர்.KK.ஷைலஜா டீச்சர்….

தனது வாழ்க்கையை மாற்றி அமைத்த ஷைலஜா டீச்சரையும், சமூக நீதித்துறை செயலாளர் பிஜு பிரபாகரன் அவர்களையும் மறக்கவே முடியாது என்று நெகிழ்வுடன் கூறுகிறார், இந்திய நாட்டின் முதல் திருநம்பி விமானி ஆதம் ஹாரி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More