செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் எடப்பாடி வசமானது அதிமுக

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் எடப்பாடி வசமானது அதிமுக

0 minutes read

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தத் தீர்ப்பால் அதிமுகவின் கட்டுப்பாடு, எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.

இதனையடுத்து, சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில், எடப்பாடி ஆதரவாளர்கள், வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை, அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளதாக பாராட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.