அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ள நிலையில், இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம், வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் இவ்வாறு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இராணுவ வாகனங்களும் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

ஆசிரியர்