Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

யாழில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெல்லியடியில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை...

பணத்திற்காக பாக்கிஸ்தான் அய்மன் அல் ஜவஹிரி குறித்த தகவலை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கலாம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் விலகுவதற்கு முன்னர் உடன்படிக்கை கைச்சாத்தான போதிலும் காபுலில் அல்ஹைதா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டுள்ளமை இந்த கொலையில்...

உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியா | பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளை இந்தியா சந்தித்து உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியாதான். உலகின் ஜனநாயகம்...

நாட்டில் பல மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டில் மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்...

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கை வந்தது

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை இலங்கையின்...

QR அட்டை நடைமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த...

ஆசிரியர்

ஒமிக்ரோன் | விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கும்வரை காத்திருப்பது பயனற்றது

ஒமிக்ரோன் திரிபின் வீரியம் தொடர்பான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையிலும் அதுபற்றி உலகம் பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையிலும் நாம் காத்திருக்கமுடியாது. எத்தகைய வைரஸ் பரவலானாலும் அதனை எதிர்கொள்வதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். 

அந்தவகையில் ஒமிக்ரோன் திரிபு குறித்து தற்போது காணப்படும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அதனைக் கையாள்வதற்கான செயற்திட்டங்கள் உடனடியாக வகுக்கப்படவேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் – 19 வைரஸின் ஏனைய திரிபுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் வீரியம்கூடியது என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத அதேவேளை, நாட்டின் சனத்தொகையில் பெருமளவானோர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தின் ஊடாகத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது,

ஒமிக்ரோன் வைரஸ் வீரியம்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறமுடியாது. மாறாக அதற்கான மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஆதாரங்கள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டிருத்தல் என்பது சந்தேகத்திற்குரிய, நிலையற்ற தன்மைக்கு ஒப்பானதாகும். 

ஆகவே முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அத்தகைய நிலையற்ற தன்மையினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சமநிலைக்குக் கொண்டுவரவேண்டும். சீனாவின் வூஹானில் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட நிலை தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். 

அங்கு வைரஸ் பரவ ஆரம்பித்து சில வாரங்கள் வரையில் குறித்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. அதன் காரணமாக முழுமையான ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

ஆனால் உலக சுகாதார ஸ்தாபனத்தையும் விஞ்ஞானிகளையும் திருப்திப்படுத்தும் வகையிலான அனைத்து ஆதாரங்களும் கிடைத்தபோது, அது மிகத்தாமதமாகியிருந்தது. அதற்குள் வைரஸ் உலகநாடுகள் அனைத்திலும் பரவியது. 

முகக்கவசம் அணிதல் மற்றும் தொற்றை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகளை முன்னெடுத்தல் ஆகிய இருவிடயங்களிலும் அதனையொத்த தவறுகள் இடம்பெற்றன.

எனவே நாம் முற்றுமுழுதாக ஓர் விஞ்ஞானரீதியான கேள்வியுடன் போராடிக்கொண்டிருக்கமுடியாது. பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையில் நாம் காத்திருக்கமுடியாது. 

எத்தகைய வைரஸ் பரவலானாலும் அதனை எதிர்கொள்வதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். 

தற்போது ஒமிக்ரோன் திரிபின் வீரியம் குறித்து மட்டுப்படுத்தப்பட்டளவிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும் அந்தத் திரிபு தொடர்பில் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக இப்போதே அதனைக் கையாள்வதற்கான வழிமுறைகளை இனங்கண்டு, அதற்கேற்றவாறான செயற்திட்டங்களை வகுக்கவேண்டும்.

இவ்வருடம் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் எமது நாடு பின்பற்றிய கொள்கைகளின் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

முறையற்ற ஆலோசனைகளை வழங்கியவர்களும் வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொள்ளாதவர்களுமே அதற்குப் பொறுப்பாளிகளாவர். அதுமாத்திரமன்றி இது தற்போதைய அரசாங்கத்தினதும் அதன் நிர்வாகத்தினதும் முழுமையான தோல்வியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

மண்ணெண்ணெய் பெற்றுத் தரக்கோரி புத்தளம் | கற்பிட்டி மீணவர்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் கற்பிட்டி மீணவர்களால் இன்று (16) மண்ணெண்ணெய் பெற்றுத் தருமாறு கோரி கற்பிட்டி பாலக்குடா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 5 ரூபாவினால் குறையும் அரிசி விலைஇறக்குமதி...

கொழும்பிலிருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் -...

பாரியளவில் அதிகரிக்கப்போகும் நீர் கட்டணம்

நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு...

தொடர்புச் செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொழும்பிலிருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் -...

பாரியளவில் அதிகரிக்கப்போகும் நீர் கட்டணம்

நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு...

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட்...

மேலும் பதிவுகள்

மக்கள் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு,...

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

ஆசிய கிண்ண கிரிக்கெட் (இ20) சுற்றுப் போட்டிக்கு முன்னோடியாக இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு போதிய பயிற்சியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா...

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை...

கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார் | பிரபல ஜோதிடர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க...

பாரியளவில் அதிகரிக்கப்போகும் நீர் கட்டணம்

நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு...

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட்...

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு