மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை | வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் – மாதகல் காணிகளை கடற்படைக்கு  வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

 மாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்ததாக சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்தது.

குறித்த விடையம் தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில்  கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் நான் காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது.

இன்றைய தினமே முதன்முதலாக காணி உரிமையாளர்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளேன். 

காணி உரிமையாளர்கள் உடன் பேசி காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே முடிவுகளை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்