Friday, January 21, 2022

இதையும் படிங்க

இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை | போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம்...

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

மஸ்கெலியாவில் 24 வயது இளம் தாய் படுகொலை | கணவன் கைது

மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான இளம் தாயொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும் கண்டிப்போம்: மனோ கணேசன்

<சியால்கோட்டில் பிரியந்த குமார படுகொலையும், இலங்கையில் தமிழ், முஸ்லிம் படுகொலைகளும்>

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை.

தனிப்பட்ட முறையில் கொலைகள், தாக்குதல்கள் உலகம் முழுக்க நடக்கின்றன. ஆனால், இன, மத, மொழி அடிப்படையில் இவை நடக்கும் போதுதான் தலைப்பு செய்தியாகின்றன. அது சரிதான். இன, மதம் உணர்வுகள் போதை வஸ்து மாதிரி ஆரம்பித்தால் முடிவுக்கு இலேசில் வராது.

சுதந்திர இலங்கையில் தமிழருக்கு எதிரான இனரீதியான தாக்குதல்கள், படுகொலைகள் 1950 களில் ஆரம்பித்து, 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஊடாக 2000கள் வரை தொடர்கின்றன. தமிழராக பிறந்த ஒரே காரணத்தால், இனரீதியாக பல நூறு தமிழர்கள், சிறு குழந்தைகள் உட்பட, தாக்கப்பட்டு, தீக்குள் எரியப்பட்டு, கொலை செயயப்பட்டார்கள். தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். தமிழரின் சொத்துகள் எரியூட்டப்பட்டன. கொள்ளை அடிக்கப்பட்டன.

கொழும்பில் எங்கள் சொந்த குடும்ப சொத்துகள் சூறையாடப்பட்டன. எனது நெருங்கிய உறவினர்கள் கொல்லப்பட்டார்கள்.

தென்னிலங்கை பாணந்துறை பகுதியில் ஒரு தமிழ் இந்து பூசகரை உயிரோடு கொளுத்திய கொடுமையை நேரில் கண்ட ஒரு தமிழ் சிறுவன்தான், பிற்காலத்தில் உலகையே உலுக்கிய ஆயுத போராட்டத்தை இலங்கையில் நடத்தும் மனநிலைக்கு தள்ளப்பட்டான், என என் மறைந்த தந்தை வீ. பி. கணேசன் அடிக்கடி கூறுவார்.

சமகாலத்தில், திகன, அம்பாறை, அளுத்கம, மினுவாங்கொடை ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டார்கள். முஸ்லிம் சொத்துகள் எரியூட்டப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.

இத்தகைய கொடுமைகளுக்கு ஒருபோதும் இலங்கை அரசியல் அமைப்பிலும், சட்ட அமைப்பிலும் எமக்கு நியாயம் கிடைக்கவே இல்லை.

சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் அதிகாலை வேளையில் தெருவில் காலை உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்த ஒரு கறுப்பு அமெரிக்கரை சில வெள்ளை அமெரிக்கர்கள் சுட்டுக்கொன்றார்கள். கொலை செய்தோர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடந்தது. அமெரிக்காவில் கறுப்பு இன மக்களுடன் சேர்ந்து வெள்ளை இன மக்களும் தண்டனையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஊடகங்களும் பொது கருத்தை உருவாக்கின.

முழுக்க முழுக்க வெள்ளை ஜூரர்களை கொண்ட நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பு வழங்கி உச்சபட்ச தண்டனையை கொலைகாரர்களுக்கு வழங்கியது. அமெரிக்காவை பற்றி எத்தனையோ குறைபாடுகள் கூறப்பட்டாலும், அமெரிக்காவில் இத்தகைய சட்ட அவகாசம் (Legal Space) சிறுபான்மையினருக்கு உண்டு என இச்சம்பவம் காட்டியது.

இத்தகைய நிலைமை இலங்கையில் எப்போதும் இல்லை. சிறு குழந்தைகள் உட்பட தமிழ் குடும்பம் ஒன்றை வெட்டிக்கொலை செய்த இரத்னாயக்க என்ற இராணுவ சிப்பாய், எமது ஆட்சியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி, தண்டனை வழங்கபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலையாளியை பதவிக்கு வந்ததும் இந்த ஜனாதிபதி விடுவித்தார். இலங்கையில் தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியான கொடுமைகளை செய்த எந்தவொரு குற்றவாளிக்கும் இதுவரை இந்நாட்டில் தண்டனை வழங்கப்படவில்லை.

இவற்றை எல்லாம் கடந்து வந்துதான் இன்றைய நாளில் நாம் வாழ்கிறோம். இலங்கை வாழ் தமிழருக்கு எதிராக இனரீதியாக இடம்பெற்ற, முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியாக இடம்பெற்ற கொடுமைகளை எதிர்த்து, போராடும், நியாயம் கேட்கும் முகாமில்தான் நான் எப்போதும் இருக்கிறேன்.

இதற்காக எவருடனும் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அந்த வரலாறு எனக்கு ஒருபோதும் இல்லை. இதனால்தான், இன்றும் இந்த கொலைகார அரசாங்கத்துக்கு எதிராக நிற்கிறோம். எதிராக வாக்களிக்கிறோம்.

தேர்தல் வேளையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில், இந்த அரசு கட்சிக்கு எதிராக வீர வசனம் பேசி, வாக்குகளை வாங்கி, வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்த பின், போக்கிரித்தனமாக அணிமாறி இதே அரசு கட்சிக்கு ஆதரவாக கையை தூக்கி மக்கள் மத்தியில் ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக நிற்கவில்லை.

இலங்கை வரலாறும், உலக வரலாறும் இப்படி இருந்தாலும், அதற்காக, பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் அடித்து, கொல்லப்பட்டதை நியாயப்படுத்தவோ, அதை அலட்சியப்படுத்தவோ முடியாது. இதையும் கண்டிப்போம். அதையும் கண்டிபோம்.

இதையும் படிங்க

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக்...

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியல் | பிரதமர் மோடி முதலிடம்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு 63 சதவிகிதமாக சரிந்து தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

தொடர்புச் செய்திகள்

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தனுஷின் சர்ச்சை பெற்றோர்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, தனுஷின் சர்ச்சை பெற்றோர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம்...

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

மேலும் பதிவுகள்

நோவக் ஜோகோவிச்சின் விசா இரத்தினை உறுதி செய்த பெடரல் நீதிமன்றம்

நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால்...

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

ஆஷஸ் தொடர் | இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. ஆஸ்திரேலியாவில்...

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 24 HRS...

நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (19.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்...

‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ | கமல் உருக்கம்

விஸ்வரூபம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்த வருத்தத்தை கமல்ஹாசன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு