முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட முறிகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயணித்த குறித்த நபர், புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையில் புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.