செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 தங்கப்பதக்கங்களை பெற்று எம்.பி.பி.எஸ். மாணவி தணிகாசலம் தர்ஷிகா சாதனை

13 தங்கப்பதக்கங்களை பெற்று எம்.பி.பி.எஸ். மாணவி தணிகாசலம் தர்ஷிகா சாதனை

0 minutes read

கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். (MBBS) இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற  அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளாா்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போதே வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டுள்ளாா்.

13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம்  தர்ஷிகா | தினகரன்

அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்றை சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இச்சாதனையை புரிந்து  பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.