செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சமையல் எரிவாயுவை துரிதமாக விநியோகிக்க விசேட ஏற்பாடு!

இலங்கையில் சமையல் எரிவாயுவை துரிதமாக விநியோகிக்க விசேட ஏற்பாடு!

1 minutes read

நாட்டில் நாளாந்தம் சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை மிக விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எரிவாயுவை ஏற்றிய 02 கப்பல்கள், சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையங்களை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனம் சந்தையின் தேவைகளில் 80 வீதமான எரிவாயுவை விநியோகிப்பதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரம் மற்றும் கண்காணிப்பின் கீழ் உற்பத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட நீலம் மற்றும் கறுப்பு நிற முத்திரையிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவதற்கான தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

எதிர்காலத்தில் தாமதமின்றி எரிவாயுவை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவை தொடர்பான பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு தொடர்பான பலநூறு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அவை சந்தையில் இருந்து அகற்றப்பட்டதோடு இந்த நிலையில் சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.