செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் வெளியரங்க இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி!

இலங்கையில் வெளியரங்க இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி!

0 minutes read

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி வெளியரங்க இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மாஅதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காணப்படும் நிலையில் அவ்வாறான வெளியரங்க இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க வாரத்தின் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை இரவு 10.00 மணிவரை அவ்வாறான வெளியரங்க இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

அதேவேளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மறுநாள் அதிகாலை 1.00 மணி வரை நடத்தவும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரை அத்தகைய இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.