புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்பட வேண்டும்!

இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்பட வேண்டும்!

3 minutes read

இந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி கொண்டு சீனாவை தடுக்கும் முகமாக நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் இன்று இடம்;பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்;சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கொடிய யுத்தம் நடந்து கொண்ட காலத்திலே தமிழினத்துக்கு நடந்த பல விரோத செயல்களை பல ஊடகங்கள் உண்மையைக் கொண்டுவர பட்டவேளையிலே அந்த காலத்தில் இருந்த அரசின் அடக்கு முறையால் ஊடகம் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டிருந்தது

அப்போது தமிழ் மக்களுக்கு வடகிழக்கிலே நடந்த கொடூர இனப்படுகொலைகள் கொடூர சம்பவங்கள் அச்சுறுத்தல்கள், காணாமல் போகப் செய்யப்பட்ட விடயங்களை உடனுக்கு உடன் அறிவிப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொழும்பிலே சிங்கள கோட்டையிலே துணிச்சலுடன் தமிழ் மக்கள் ஒரு நீதிக்காக போராடுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உட்படுகின்றர்கள் அதனை எதிர்த்து தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள். என அந்த ஆயுத போராட்டதை உலகத்துக்கு சர்வதேச ஊடகங்கள் ஊடாக நியாயப்படுத்தி தெரியப்படுத்தி வந்தார். இவ்வாறு செயற்பட்டமையினல் அவர் சந்திரிக்கா அமையார் காலத்தில் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அன்று குமார் பொன்னம்பலம் நீங்கள் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் நாட்டுமக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார் என கணித்து அன்று கூறினார். அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அவரின் கருத்தை நிராகரித்தனர்.

தமிழ் மக்களுடைய இன விடுதலைப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சமமாக வாழவேண்டும் அதற்காகத்தான் போராடுவதாக அன்று குமார் பொன்னம்பலம் அவர் கூறினார் அவ்வாறு பல புத்திஜீவிகள் நியாயப்பாட்டை சொல்லும் போது படுகொலை செய்யப்பட்டனார்.

எனவே அந்த காலத்திலே ஒரு இனத்தை குறிவைத்து அவர்கள் போராடியதால் இன்று இந்த நாடு அதலபாதாளத்திற்கு போயுள்ளது இந்த விடையங்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இலங்கை மீது கண்வைத்துள்ள நாடுகள் உங்களுடைய நாடுகளின்; நலன்கருதி கொண்டு இந்த இலங்கை தீவிலே நீங்கள் நினைத்தவாறு அரசியலை நடாத்துவதாக இருந்தால் இதற்கு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம.;

இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவை தடுக்கும் முகமாக இந்திய தங்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகல்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.

இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊண்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்

எனவே அந்த விடையத்தை கையைவிட்டு நீங்கள் கடந்த 70 வருடகாலமாக போரடிவருகின்ற எமது இந்த மக்களை அடிமைகளாக்க நினைப்பதை கைவிட்டுவிட்டு தமிழ் மக்கள் விரும்புகின்ற வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு சுயநிர்ணயத்துடன் அங்கீகரிகப்பட்ட இறையான்மையுள்ள ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக நீங்க அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும்

மாறாக ஓற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவருகின்ற வடக்கிழக்கு தமிழ் மக்களை அதனை முடக்கும் விதமாக நீங்கள் செயற்படுவதாயின் மக்கள் புரட்சி வெடிக்கும். அதேவேளை எங்கள் அரசியல் அபிலாiஷகளுக்கு உங்களைத்தாண்டி உலகத்தில் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் உங்களுடைய நலுனுக்காக இலங்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்திருக்க போடப்ட்ட ஒப்பதந்தம் தமிழ் மக்கள் நலன்கருதி நீங்கள் போடவில்லை 34 வருடங்களுக்கு மேலாக அன்றே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தம். எனவே மீண்டும் நீங்கள் பழையதை தூக்கி கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல நீங்கள் எத்தனிக்க கூடாது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More