March 26, 2023 10:48 pm

மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்ற யாழ். வர்த்தகர் தற்கொலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். அவர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்று அழகு சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

மீற்றர் வட்டிக்கு எடுத்த பணத்தைச் செலுத்துவதற்கு மீண்டும் மீற்றர் வட்டிக்கு பணம் எடுத்ததன் காரணமாக வட்டிக்கு மேல் வட்டி ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்