தேவையான பொருள்கள்
வரகு 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கிராம்பு ஏலக்காய் பட்டை தலா 2
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி, பூண்டு விழுது 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பால் 1 கிண்ணம்
நெய் 2 மேசைக்கரண்டி
முந்திரி 10
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயத்தைப் போட்டு, வதக்கி இஞ்சி பூண்டு விழு, பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, வதக்கி தேங்காய்ப் பால், தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊறவைத்த வரகு அரிசியை போட்டு 15 நிமிடங்கள் சிம்மில் வேகவிடவும். வெந்ததும் திறந்து நன்கு கிளறி இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.