செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்

6 minutes read

இறைவன் எமக்கு வரமாகத் தந்த கொன்றை மரம் எம் சங்க இலக்கியங்களைப் பொன் போன்ற தங்க மஞ்சளால் அலங்கரித்தது என்றால் மிகை ஆகாது. இந்தக் கொன்றை மரம் எவ்வாறெல்லாம் பொன் போன்று பாடல்களில் மிளிர்ந்துள்ளது என்பதனை இந்தப் பதிவினூடு நோக்கலாம்.

சித்திரையை வரவேற்று வைகாசி, ஆனி, ஆடி மாதங்களான இக்காலத்தில் சரங்களாகப் பூத்து எமது பூமித்தாயை அலங்கரிப்பது கொன்றை மரமாகும். அதனாலேயே இக்காலத்துக்கேற்ற பதிவாக இது அமைகின்றது. முல்லை நிலத்துக்குரிய மரமாகக் கொன்றை விளங்குகின்றது. இதற்கு வேறு பெயர்களாக சரக்கொன்றை, கடுக்கு எனவும் இலக்கியங்களில் உள்ளன. இதனை ஈழத்தில் கொண்டல் மரம் அல்லது திருக் கொண்டல் மரம் என்றும் அழைப்பர். காடும், காடு சார்ந்த நிலத்துக்குரிய தொழிலாகக் கொன்றைக் குழல் ஊதுதல் எனவும் இருக்கின்றது. அதன் நீண்ட பழத்தைக் காய விட்டு குழல் ஊதி மகிழ்ந்திருக்கின்றனர். முல்லைத் திணையில் அமைந்த பல பாடல்களில் கொன்றைப் பூக்கள் இடம் பிடித்திருக்கின்றன.

கலித்தொகை 103 முல்லைக்கலியில்
“மெல்லினர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்”
எனத் தொடங்கும் அடிகளில் நல்லுரு திரனார் எனும் புலவர் பல பசுக்களுக்கு உரிமையுடைய ஆயர் குல மறவர்கள், மென்மையான கொன்றை, காயா, வெட்சி, பிடவம் முல்லை, கஞ்சங்குல்லை குருந்தம் கோடல், பாங்கர் முதலிய பூக்களால் ஆன கண்ணியைச் (பூமாலை) சூடிக்கொண்டு தொழுவுக்குள் நுழைந்து ஏறு தழுவுதலைத் தொடங்குகின்றனர் எனப் பாடுகின்றார்.

கலித்தொகை 102 முல்லைக்கலியில்,

“வண்ணவன் தோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும்”

எனவரும் பாடலில் “ஏறு தழுவுதலைப் பார்க்க வந்திருக்கும் கன்னியருள் ஒருத்தி பிடவும், முல்லையும் கொன்றையும், பிறவுமான மலர்களைக் கொய்து தழை,கோதை இழை என்பன கட்டி அமர்ந்திருக்கின்றாள். அவள் யார்?” எனத் தலைவன் கேட்பதாக அமைந்திருக்கின்றது. ஆகப் பெண்களும் கொன்றை மலர் மாலை அணிந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கின்றனர் எனத் தெரியவரும் வருகின்றது. ஏறு தழுவுதலில் பெற்ற வெற்றியைக் கொண்டாடவும் கொன்றைப் பூமாலை அணிந்து குரவைக் கூத்தாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

ஐங்குறுநூறில் முல்லைத்திணையில் 100 பாடல்களைப் பாடிய பேயனார் எனும் புலவர் தனது 420 ஆவது பாடலில்,
“பொன்னென மலர்ந்த கொன்றை; மணியெனத் தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு” எனப் பாடுகின்றார். அதாவது “கானகமே! பொன்னென்னுமாறு மலர்ந்த கொன்றையும், நீல மணி போன்று மலர்ந்த காயாவும், மலர்கள் நிரம்பிய தோன்றியுமாகிய இவற்றாலே நீ இவ்வேளை நல்ல அழகினை அடைந்துள்ளாய். ஒளி பொருந்திய என் காதலியை அழைத்துக் கொண்டு நின்னைக் காண்பதற்கு வருகிறேன்” என ஒரு தலைவன் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. கானகம் பொன்னென மிளிரும் காட்சியை அழகாகப் புலவர் இப்பாடலில் காட்சிப்படுத்தியுள்ளார்.

நற்றிணை 242 இல் முல்லைத் திணையில் விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் எனும் புலவர்,
“பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறிஞ்சினை கஞலா”
எனப் பாடும் அடிகளில், கொன்றைகள் பொற்காசுகளைப் போன்ற பூக்களைப் பூத்தன. நீல மணி நிறத்தில் காயா பூத்தது என்று கூறிப் பொன் போன்ற கொன்றைப் பூக்கள் தலைவியின் பொன் மேனியாகவும், காயாவின் கருநீல மலரை அவள் கூந்தலாகவும் தலைவன் எண்ணுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கின்றது.

அதுபோலவே நற்றிணை 371 லும்
“காயங்குன்றத்துக் கொன்றை போல” என வரும் பாடலில் காயா மரங்கள் கொண்ட மலையில் கொன்றைப் பூக்கள் மலர்ந்து சரம் சரமாக தொங்குகின்றன என இந்தப் பாடல் வர்ணிக்கின்றது.

அடுத்து அகநானூறு நான்கில், “பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ” என வரும் பாடலில்,பசிய அடி மரத்தினை உடைய கொன்றை மரத்தின் மொட்டுக்களும் மெல்லிய தம் பிணிப்பு அவிழ்ந்து மலர்ந்தன எனப் பொருள் தருகின்றது.

குறுந்தொகை 21 இல்,
“புதுப் பூங்கொன்றை கானம் கார் எனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே” என்று வரும் அடிகளில் மகளிரின் கூந்தலைப் போல புதுப் பூக்களுடன் தோன்றும் கொன்றை மலர்களோடு காணப்படும் கானகமானது இக்காலத்தைக் கார்காலம் எனக் கூறினாலும் தலைவன் வராததால் அதனைக் கார் எனக் கொள்ள மாட்டேன் எனத் தலைவி கூறுகின்றதாக அமைந்துள்ளது. இதே குறுந்தொகை 148 இல்,
“காசின் அன்ன போது ஈன் கொன்றை”
என்பதில் காசைப் போன்ற பேரரும்பினைக் கொன்றை மரமும் தோற்றுவித்தது. கார் காலம் என அறிவித்தது. அவர்தான் வந்திலர் எனத் தலைவி வருந்துவதாக அமைந்திருக்கின்றது.

இவ்வாறாக இந்தக் கொன்றை மரமானது காடும் காடு சார்ந்த, முல்லை நிலத்தின் மரம் ஆதலால் முல்லை திணையில் அமைந்த பல பாடல்களில் இடம் பிடித்துள்ளது. அதன் பின் வந்த பக்தி இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இது தனி இடம் பிடித்துள்ளது. இந்த நறுமணம் வீசும் தேன் நிறைந்த மலர், சிவபிரானுக்குரிய மலராகும்.
சுந்தரர் பாடிய,
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே
என மின்னல் போலும் உள்ள சடையில், விளங்குகின்ற கொன்றை மாலை அணிந்தவனே எனப் பாடுகின்றார். ஔவையார் கொன்றைவேந்தன் என்ற நீதியிலக்கியத்தை அருளியுள்ளார். கொன்றை வேந்தன் என்பது கொன்றை அணிந்த சிவபெருமானைக் குறிக்கின்றது. அந்த இலக்கியத்தில், ஔவையார் எழுதிய கடவுள் வாழ்த்துப் பகுதியில்,
“கொன்றை வேந்தன் செல்வனடியினை
என்றுமேத்தித் தொழுவோம் யாமே”
எனும் அடியிலேயே இந்த இலக்கியத்தின் பெயர் அமைந்துள்ளது.

கொன்றைப் பூ, தாய்லாந்தினதும் கேரள மாநிலத்தினதும் தேசிய மலராகவும் விளங்குகின்றது. கேரள மக்கள் கொண்டாடும் விஷூ வருடம் எனப்படும் வருடப்பிறப்பு பண்டிகையில் இந்தத் தங்க மஞ்சள் கொன்றைப் பூவினால் அலங்கரித்து, இறைவனுக்குப் படையலிடும் போது இதைப் புனிதமாக வைத்து வணங்குகின்றனர். கொன்றைப் பூக்களும், மரத்தின் ஏனைய பகுதிகளும் பல மருத்துவக் குணங்களைக் கொண்டன. இதனைக் கேரளா, கன்னியாகுமரி போன்ற இடங்களில் தம் வீட்டில் ஈடுபாட்டுடன் நடுவதை மக்கள் பாரம்பரியமாகக் கொண்டுள்ளனர்.

எம் மனத்தை அப்படியே கொள்ளை கொள்ள இறைவன் வரமாக எமக்கு தந்த கொன்றை மரத்தினை எமது வீடுகளில் நாம் இப்பொழுது காண்பதில்லை. காடுகளிலும் அருகியே காணப்படுகிறது. இறைவன் எமக்களித்த இலக்கியங்களில்
இடம் பிடித்து
சங்க காலத் தமிழனின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் இந்த மனதை மயக்கும் மஞ்சள் கொன்றையை அழியாது காக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More