செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி வரலாற்று வெற்றி

இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி வரலாற்று வெற்றி

1 minutes read

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையும் படியுங்கள்: TNPL இறுதிப்போட்டி: திண்டுக்கல் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்
பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இறுதி நாளான இன்று விளையாடிய இங்கிலாந்து அணி 68.1 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 271 ரன்களே எடுத்தது.

இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More