June 9, 2023 8:13 am

யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமையின் நிமித்தம் சென்ற யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பேசிய தகாத பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். வலய ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்குக் கடமையின் நிமித்தம் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர், குறித்த பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ ஒவ்வாத வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள், “யார் நீங்கள்” என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது பதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர், “நான் தீபக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றிய பின்னர் யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர்” என்று கூறியுள்ளார்.

திடீரென ஒரு வகுப்புக்குச் சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களைக் கொடுத்தபோது, சில தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததுடன், “நீங்கள் கிரீம் பூசுவது இல்லையா, பூசினால் அழகாய் இருப்பீர்கள்” என புது டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பலமுறைப்பாடுகள் வெளிவரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரிய ஆலோசகர் பாடசாலை செல்லும்போது தமக்கு அறிவிக்காமல் சென்றதாகவும், இந்த பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமக்கு செவி வழி மூலமான முறைப்பாடு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்