June 5, 2023 10:40 am

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23)  தீர்ப்பளித்துள்ளது.

தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு  மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள்,  சி-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி   அரசு தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து இந்த தண்டனையை விதித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்