September 22, 2023 2:20 am

உலகப் பிரசித்தமான எடின்பரோ மரதன் விழாவில் எம்மவர்களும் சாதனை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான போட்டியில் ஈழத் தமிழர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் மே மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில்  உலகப் பிரசித்தமான போட்டியான எடின்பரோ மரதன் விழா இடம்பெற்றது.

ஈழத்தில் இளைய சமூகம் போதைப்பொருள் பாவனையால் தம்மையும் தேசத்தையும் அழித்துக்கொள்ளக்கூடாது என்றும் உடலின் நலத்திலும் மருத்துவத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட தலைமுறையாக வாழவும் வளரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் வீரர்கள் பங்குபற்றி இருந்தனர்.

இக் கோரிக்கையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கையர்கள் பங்குபற்றிய உலகப் பிரசித்தமான போட்டியான எடின்பரோ மரதன் விழாவில்  சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்களும் 400 அமைப்புக்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை, கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF) அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்