October 4, 2023 5:22 am

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளருக்கு அச்சுறுத்தல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) வீட்டிற்கு சற்று முன்னர்  22.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தாம் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதுடன்  நீர் விரைவில் கைது செய்யப்படுவீர் என்று எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்