ஒக்டோபர் மாதம் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அவர் கூறினார்.
இம்மாத இறுதியில் நாட்டின் காலநிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.