கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை (4) நடைபெறவுள்ளது.
கோழி இறைச்சி உற்பத்தியார்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும், அவ்வாறு இருந்தபோதும் தொழில்துறையினர் அந்தச் சலுகையை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.