December 7, 2023 12:05 pm

இன்றைய வானிலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் கூடியளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராதபுரம்  மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 – 45 கி.மீ வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்…

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம்  தொடக்கம்  மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 55 – 60 கிலோ மீற்றருக்கும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிக காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மேலும், புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 45 – 50 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகமாக வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்