October 3, 2023 1:15 am

ராஜீவ் கொலை வழக்கு | விடுதலையான 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியமத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் இவர்களில் 4 பேர் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாங்கள் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் திருச்சி சிறப்பு முகாமி தங்க வைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனை அங்கிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி நளினி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கின் விசாரணை று மீண்டும் வந்த நிலையில்இ மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இலங்கைக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் குறித்து இலங்கை துணை தூதரகத்தில் கேட்கப்பட்டுள்ளது. அவை கிடைத்தவுடன் நால்வரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்