December 10, 2023 4:01 pm

யாழில் மூளைக் காய்ச்சலால் கிராம அலுவலர் மரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சலால் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தீபாவளி தினத்தன்று தனது வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து வீட்டார் அவரை அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையின்போது மூளைக் காய்ச்சலால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்